
பலவித சுப யோகங்கள் போன்று ஒரு சில அசுப யோகங்களையும் பராசரர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அவற்றுள் ஒரு சில அசுப யோகங்களைப் பற்றி இந்த கட்டுரையில், ஒருவரின் ஜாதகத்தில் எப்படி அமைகிறது என்பதனை காணலாம்.
1. அபகீர்த்தி யோகம்
கீர்த்தி - அதாவது புகழ் பெறுதல். இது ஒருவரின் ஜாதகத்தில் 10ஆம் இடத்தைக் கொண்டு அறிய முடியும். இங்கு, 10ல் சூரியன் - சனி சேர்ந்து பாபகிரகங்களின் இணைவு / பார்வை பெற்றிருப்பின் அல்லது நவாம்சத்தில் பாவர்கள் இணைவு / பார்வை பெற்றிருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.
அபகீர்த்தி என்றால், புகழ், கெளரவம், அந்தஸ்து பாதிக்கப்படுதல் ஆகும். கீர்த்தி என்பது உயர்ந்த நிலையை அடையக்கூடியது. எவ்வளவு செல்வம் இருப்பினும் கீர்த்தி கிடைத்துவிடாது. செல்வம் இல்லாதபோதும் கூட சிலர் கீர்த்தி, புகழ் பெறுவதைக் காணமுடியும். அரசியல் வாழ்வில் புகழ் பெற்ற திருவாளர். காமராஜரை இங்குக் குறிப்பிடலாம்.
2. தேக கஷ்ட யோகம்
லக்கினாதிபதியான கிரகம் 8ஆம் இடத்தில் இருந்தாலோ அல்லது பலம் பெற்ற பாபகிரகங்களுடன் இணைந்திருந்தாலோ, இந்த தேக கஷ்ட யோகம் ஏற்படும். இந்த யோகம் உள்ளவர்களின் உடல் கஷ்டங்களை அனுபவிக்கும்.
இந்த யோகம் உள்ளவர்களுக்கு, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும். உடல் வழிகளை அனுபவிப்பார்கள். இந்த கடும் உழைப்பினால் ஏற்படும் வழிகளைத் தீர்க்க அல்லது மறக்க அநேகம் பேர் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவர். காலம் முழுதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
3. புத்திர களத்திர ஹீன யோகம்
5ஆம் இடத்தில் தேய்பிறை பாப சந்திரனிலிருந்து 1-7-12 ஆம் இடங்களில் பரவலாகப் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி தனித்தனியாக இருப்பின் இந்த யோகம் ஏற்படும். இந்த யோகத்தால், மனைவி, குழந்தைகளை இழந்து விட நேரும் அல்லது பிரிய நேரிடும்.
மேற்படி மூன்று ஸ்தானங்களில் அதாவது 1, 7, 12 (சந்திரனிலிருந்து ) சூரியன், செவ்வாய், சனி ஆகிய பாபர்கள் எவரேனும் ஒருவர் இல்லாமல் போனாலும் இந்த யோகம் நிகழாது. மேற்சொன்ன மூன்று இடங்களிலும்,
மூன்று இயற்கை பாபர்களான சூரியன், செவ்வாய் , சனி எவர் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்க இந்த யோகம் ஏற்படும். அப்போது தான் இந்த புத்திர, களத்திர ஹீன யோகம் நிகழ்வுக்கு வந்து அதனால், மனைவி குழந்தை இழக்கவோ அல்லது பிரியாவோ நேரிடும்.
4. பந்தன யோகம்
இந்த யோகம் உள்ளவர்கள், காவலில் வைக்கப்படுதல் அல்லது குறைந்த கால சிறைத் தண்டனை பெறுதல், சுதந்திரமாகத் தெரிந்தவர்களைக் கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைப்பது பந்தமாகும். கயிற்றால் கட்டப்படுவதும் பந்தனமாகும்.
இந்த யோகம் அமைப்பானது, லக்கின அதிபதியும், 6க்கு உடையவரும் சேர்ந்து கேந்திரம் எனும் 1-4-7-10ல் அல்லது 1-5-9 எனும் திரிகோணத்தில் இருக்க, அவர்களுடன் சனி / ராகு / கேது சேர்ந்திருந்தால், இந்த பந்தன யோகம் ஏற்படும்.
எந்த அசுப யோகமாயினும், ஒருவரின் தசை / புத்தி காலங்களில் அதனை அனுபவிக்க நேரிடும். இதற்குப் பரிகாரம், நேர்மை தவறாத வாழ்க்கையும், உண்மை மட்டுமே உரைத்தல் போன்றவற்றால், பாதிப்படையாமல் சுக வாழ்வு வாழலாம்.
மேற்படி நேர்மை, உண்மை வாழ்வு வாழ்ந்தும், அசுப யோகம் ஏற்படுமாயின் / தொடருமாயின், சிவ வழிபாடும், பிரதோஷ பூஜையில் பங்கேற்பும், புதன், சனிக் கிழமைகளில் மஹாவிஷ்ணு வழிபாடு போன்றவற்றால் பிரச்னைகளை ஆரம்ப காலத்திலேயே வெளியேற வழிவகுக்கும்.
தொடர்புக்கு : 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.