மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இன்று வைகுண்ட ஏகாதசி: 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம்: திருமலையில் குவிந்த பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வளாகம் 15 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதரி நாளில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில்

News image
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் ஏழுமலையான் கோயில். 
Updated On :28 டிசம்பர் 2017, 8:09 pm

DIN

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வளாகம் 15 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதரி நாளில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் வந்து குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையான் கோயிலையொட்டி உள்ள உள்பிரகாரம் திறக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இதனை வைகுந்த வாயில் (சொர்க்க வாசல்) என்று அழைக்கின்றனர். 
அதன்படி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு திருமலையில் வைகுந்த வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த வைகுந்த வாயில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்.
இந்த வைகுந்த வாயில் வழியாகச் செல்ல பக்தர்கள் பலர் ஆர்வம் காட்டினர். அதனால் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் இதற்காக காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஏழுமலையானின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காத்திருப்பு அறைகள் நிரம்பியதையடுத்து நீண்ட தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு 24 மணி நேரமும் நிழற்கூரைகள், கழிப்பறை வசதி, சிற்றுண்டி, உணவு, குடிநீர், பால், காபி, டீ உள்ளிட்டவை வழங்குதல், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று தங்க ரத புறப்பாடும், துவாதசி அன்று தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இதற்காக கோயில் முழுவதும் 15 டன் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை திவ்ய தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர்கள், ஆர்ஜித சேவைகள், விஐபி. பிரேக் உள்ளிட்ட அனைத்து வித தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். துவாதசி அன்று தர்ம தரிசனம், ரூ. 300 விரைவு தரிசனத்தில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 
திருமலை மலைப்பாதைகள், நடைபாதை மார்க்கங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி இடையே 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் வருகை அதிகம் இருந்ததால் தங்குவதற்கு வாடகை அறை கிடைக்காமல் பக்தர்கள் வெட்ட வெளியில் குளிரில் நடுங்கியபடி தங்கியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.