சென்னை ராயபுரத்தில் வலம்புரி விநாயகர் சிலை, அம்மன் சிலையாக உருமாறி காட்சியளித்ததாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ராயபுரத்தில் குமாரசாமி தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் வீட்டு வாசலில் உள்ள வலம்புரி விநாயகர் சிலை அம்மன் சிலையாக உருமாறியுள்ளதாக தகவல்கள் பரவியது.
இதனை அப்பகுதியில் இருந்த சிறுவர்கள் பார்த்து பலருக்கு தகவல் பரப்பியுள்ளனர். இதையடுத்து, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிலையைக் காண திரண்டனர்.
அப்பகுதியில் கூட்டம் அதிகம் கூடியதால் ராயபுரம் காவல்துறையினர் அங்கு வந்த பக்தர்கள் அனைவரையும் வரிசையாகச் செல்லுமாறு அறிவுறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
வலம்புரி விநாயகர், அம்மனாக மாறியதை பார்த்த பலரும் தங்களின் செல்போனில் படம் பிடித்தனர். சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். ராயபுரத்தில் உள்ள சேனியம்மன்தான் விநாயகர் சிலையில் இறங்கி இருப்பதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



