சபரிமலையில் பிரசாதங்களின் தரத்தைக் கூட்டத் திட்டம்

சபரிமலையில் பிரசாதங்களின் தரத்தைக் கூட்டத் திட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை இனி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி...
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை இனி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி (சி.எப்.டி.ஆர்.ஐ) நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது

மத்திய அரசு நிறுவனமான இந்த சி.எப்.டி.ஆர்.ஐ உணவு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி பழனி முருகன் கோயிலிலும், திருப்பதியிலும் இதுவரை பிரசாதம் தயாரித்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் நடைபெறும் புனித பயணத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். 

இவர்களுக்கு அப்பமும், அரிசியினால் செய்யப்பட்ட அரவணை பாயசமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதங்களின் தரத்தையும், சுவையையும் இன்னும் கூடுதலாக்கும் வகையில், சி.எப்.டி.ஆர்.ஐ நிறுவனத்துடன் சபரிமலை நிர்வாகம் இணைந்து செயல்பட உள்ளது. 

சி.எப்.டி.ஆர்.ஐ நிறுவனத்தின் உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள், பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர் தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியுள்ளார். அடுத்த சீசனிலிருந்து பக்தர்களுக்கு புதிய தயாரிப்பிலான அப்பமும், அரவணை பாயசமும் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com