இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வீரராகவப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு

News image
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வீரராகவப் பெருமாள்.
Updated On :30 ஏப்ரல் 2018, 9:58 pm

DIN

வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 
சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோயிலின் மாடவீதிகளின் வழியாக பல்லக்கில் பவனி வந்தார். அதைத் தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது. மாலையில் விஜயகோடி விமானத்தில் வீரராகவர் வலம் வந்தார். திருமொழி சாற்றுமுறை, ரத்னாங்கி சேவை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இவ் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டு வீரராகவரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.