படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆடிக் கிருத்திகையையொட்டி, வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த செல்வமுத்துக்குமாரசுவாமி.

Published On :


நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதர் சுவாமி அருள்பாலிக்கிறார்.
மேலும் செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, யதாஸ்தானத்திலிருந்து வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி கிருத்திகை மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு 51 வகையான பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நவரத்தின அங்கி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சிவாச்சாரியார்கள் சண்முகாஅர்ச்சனையுடன், தீபாராதனை காட்டினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த வழிபாட்டில் தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.