வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஏகாம்பரநாதர் கோயில் சிலை வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தான் விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் பக்தர்கள் மனு

ஏகாம்பரநாதர் கோயில் புதிய சிலை முறைகேடு, பஞ்சலோக சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்க வேண்டும் என பக்தர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை

சிலை முறைகேடு வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என மனு அளித்த பக்தர்கள். 

Updated On :


ஏகாம்பரநாதர் கோயில் புதிய சிலை முறைகேடு, பஞ்சலோக சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்க வேண்டும் என பக்தர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
இது தொடர்பாக அவர்கள் அம்மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில், சுமார் 1,600 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோமாஸ்கந்தர் திருமேனி சிலை உள்ளது. இச்சிலைக்குப் பதிலாக புதிய சிலை ஒன்றைச் செய்ய இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், கோயில் ஸ்தானிகர் ஆகியோர் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னிச்சைûயாக முடிவெடுத்தனர். அச்சிலைக்காக, உள்ளூர், வெளியூர், வெளிநாடு வாழ் பக்தர்களிடமிருந்து பல கிலோ தங்கத்தை நன்கொடையாகப் பெற்றனர். 
இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி, சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பின்பு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் புலன்விசாரணையில் அச்சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்தது. 
தவிர, கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 30-இல் திருடுபோன சிறிய கந்தர் சிலை, கிருஷ்ண தேவராய மன்னர் நன்கொடையாக வழங்கிய பஞ்சலோக சிலைகள் கடத்தப்பட்டு, வெளிநாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி  பொன்.மாணிக்கவேல் கண்டறிந்து, அச்சிலைகளை ஏகாம்பரநாதர் கோயிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். 
இதனிடையே, சோமாஸ்கந்தர் புதிய சிலை தொடர்பான முறைகேட்டில் அறநிலையத் துறை கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா கடந்த ஜூலை 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார். எனவே, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் புலன்விசாரணை சரியான பாதையிலும், நேர்மையாகவும் உள்ளது. 
இந்த விசாரணை குறித்து பொதுமக்கள், பக்தர்கள், மனுதாரர் என யாரும் எந்தக் குறையையும் நீதிமன்றத்திலோ, அரசிடமோ தெரிவிக்கவில்லை. ஆனால், திடீரென இந்த வழக்குகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றி அரசு கடந்த 2-ஆம் தேதி ஓர் ஆணையை வெளியிட்டது.
இது பக்தர்கள், மனுதாரர், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏகாம்பரநாதர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் தொடர்பான வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 
இந்நிலையில், திடீரென சிபிஐ-க்கு வழக்கை மாற்றினால் விசாரணை காலதாமதமாகும். அதோடு, வழக்குகளும் நீர்த்துப் போகும். குற்றவாளிகள் தப்பிக்கவும் அது வழிவகுக்கும். எனவே, அந்த அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். அதோடு, தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தான் விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.