சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

காஞ்சிவாக்கம் முத்துமாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழாஸ்ரீபெரும்புதூர், ஆக .6: காஞ்சிவாக்கம் முத்துமாரியம்மன் கோயியின் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.குன்றத்தூர் ஒன்றியம் காஞ்சிவாக்கம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விளக்கு பூஜையும், அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து சனி

காஞ்சிவாக்கம் முத்துமாரியம்மன் கோயியின் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :

காஞ்சிவாக்கம் முத்துமாரியம்மன் கோயியின் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம் காஞ்சிவாக்கம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விளக்கு பூஜையும், அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. 
இதையடுத்து சனிக்கிழமை அம்மன் திருவீதி உலாவும், பதி பூஜையும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை கரகம் சுற்றுதல், கூழ்வார்த்தல் நடைபெற்றது. இதையடுத்து இரவு தீ மிதித் திருவிழா நடத்தப்பட்டது. இதில் மாலை அணிந்து 200-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
விழாவில் காஞ்சிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழு உறுப்பினர் பனப்பாக்கம் ரவி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதி உலா நடைபெற்றது. இதில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.