தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

திருப்பாவை வீதியுலா சென்ற மாணவ, மாணவியர்

மார்கழி மாதத்தில் வழிபாடு செய்தல் மற்றும் பெண்கள் நோன்பிருத்தல் ஆகியவற்றை நினைவுப்படுத்தும் நோக்கத்தில்

திருப்பாவை  பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏபிஎஸ்  வித்யா மந்திர்  பள்ளி  மாணவ, மாணவியர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


மார்கழி மாதத்தில் வழிபாடு செய்தல் மற்றும் பெண்கள் நோன்பிருத்தல் ஆகியவற்றை நினைவுப்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளூர் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளி மாணவ, மாணவியர் திருப்பாவை பாசுரங்களைப் பாடி மார்கழி 1 முதல் வீதியுலா வருகின்றனர்.
தமிழ் மாதங்களில் தனுர் மாதம் என அழைக்கப்படும் மார்கழி மாதம் புனிதமாகப் போற்றப்படுகிறது. 
இம்மாதத்தில் அன்பும், அறனும், அமைதியும் நிலை பெற வலியுறுத்தும் நோக்கத்தில், திருவள்ளூர் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளியின் சார்பில் மாணவ, மாணவியர்ஆண்டுதோறும் ஆண்டாள் திருப்பாவையை இசைத்து வீதியுலா வரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், மார்கழி-1 முதல் திருப்பாவை பாசுரங்களைப் பாடியபடியே மாணவ, மாணவியர் வீதியுலா வரும் நிகழ்வை நடத்தி வருகின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியை கல்விக்குழுமச் செயலர் ரமேஷ் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முதல்வர்கள் சாருலட்சுமி, ரத்னாபாய் மற்றும் பள்ளி இயக்குநர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம், கல்விக் குழும அறக்கட்டளை உறுப்பினர்கள் பாபு, தொல்காப்பியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதில், பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர் ஆண்டாள், கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட வேடங்களில் திருப்பாவை பாசுரங்களைப் பாடியபடியே முக்கிய வீதிகள் வழியாக வீரராகவர் திருக்கோயிலை வந்தடைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.