திருமலையில் புதன்கிழமை காலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட துவாதசி அன்று காலை தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணியளவில் ஏழுமலையான் கோயிலிருந்து சக்கரத்தாழ்வாரை திருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயிலுக்கு எழுந்தருளச் செய்தனர்.
அதைத் தொடர்ந்து ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் திருக்குளத்தில் தீர்த்தவாரி உள்ளிட்டவை 5.30 மணி வரை நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் 66 ஆயிரம் கோடி தீர்த்தங்கள் இணைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் திருக்குளத்தில் புனித நீராடினால் 66 ஆயிரம் தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும் என்பதால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முசிறியில் மூதாட்டி சடலமாக மீட்பு

அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

தொட்டியம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமில் உதவிகள்
ஹெளரா ரயிலில் 11 கிலோ குட்கா பறிமுதல்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



