குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

திருமலை மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை மலைப் பாதையில் சென்ற பக்தர்கள் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் பயந்து ஓடினர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


திருமலை மலைப் பாதையில் சென்ற பக்தர்கள் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் பயந்து ஓடினர்.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாம் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகில் இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று மலைப் பாதையைக் கடந்து செல்வதைக் கண்டனர். அந்த சிறுத்தை மலைப்பாதையை வேகமாகக் கடந்து சென்றதால் பக்தர்கள் எவரையும் அது பொருட்படுத்தவில்லை. இருப்பினும் அப்பகுதியைக் கடந்த பக்தர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் வேகமாகக் கடந்து சென்றனர்.
மலைப் பகுதியில் சிறுத்தைகள் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அடர்ந்த வனப் பகுதிக்குள் வசிக்கின்றன. ஆனால் அவை தண்ணீர் தேடி அவ்வப்போது மலைப் பாதையில் உள்ள குடிநீர் தொட்டி பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், பக்தர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சிறுத்தை வந்து சென்றது வனத் துறை அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறுத்தை ஊர் பகுதிக்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அதன் கால் தடத்தை வனத் துறையினர் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் அதை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவதற்கும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.