தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பிப். 20-இல் பிரம்மோற்சவம் தொடக்கம்

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:12 pm

DIN

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
இக்கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்ச் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அன்றைய நாளில், காலை விஷேச நிகழ்ச்சியுடன், வெள்ளி ரிஷபம், தங்கமான் வாகனத்தில் அம்மன் எழுந்து அருளுகிறார். இதையடுத்து, தங்க சிம்மம், தங்க சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், பத்ரபீடம், ஆள்மேல்பல்லக்கு, சரபம், விஸ்வரூப தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெறவுள்ளன. 
அத்துடன், மோகினி அலங்காரம், சந்தனக் காப்பு உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளும், அடுத்தடுத்த நாள்களில் நடைபெறவுள்ளது. இதற்காக, யானை, நாகம், தங்ககிளி, குதிரை, வெள்ளி, நூதன தங்க காமகோடி விமானம் ஆகிய வாகனங்களில் காமாட்சியம்மன் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதிகளில் புறப்பாடு சேவை நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்பாள் தேவஸ்தானம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.