

காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கொழுமணிவாக்கம் கிராமத்தில்
(மாங்காடு அருகில்) உள்ள அருள்மிகு சிவகாமவல்லி உடனுறை பாலீஸ்வரர்
திருக்கோயிலில் திருப்பணி தொடக்க விழாவை முன்னிட்டு பாலாலயம் சிறப்பு
ஹோமம் பூஜை வைபவங்கள் நடைபெறுகின்றது.
பல ஆன்மீகச் சான்றோர்கள் பங்கேற்கும் இவ்விழா ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் ஹேவிளம்பி ஆண்டு மாசி மாதம் 13-ம் தேதி (25.02.18) ஞாயிற்றுக்கிழமை உத்ராயணம் சிசிரருது சுக்லபக்ஷம் தசமி திதியும், மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் பாலாலய முகூர்த்தம் (திருப்பணி தொடக்க விழா) மேற்கொள்ள பெரியோர்களா ல்நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை தீர்த்த பாலீஸ்வரர் அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள்
செய்துள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்
பாண்டிச்சேரி ஸ்ரீ அமிர்தகடேச சிவாச்சாரியர் தலமையில்
24.02.18 - மாலை 6.00 மணிக்கு விசேஷ திரவிய ஹோமங்களும் கஸகர்ஷயமும் நடைபெற உள்ளது.
25.02.18 - காலை 5,00 மணிக்கு 2-ம் கால விசேஷ ஹோமம் செய்து ஞாயிற்றுக்கிழமை பூர்ண ஹீதியுடன் பாலாலயம் செய்யப்படுகிறது.
தகவல்களுக்கு - 9884303061 / 9444940327
- எஸ்.வெங்கட்ராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.