எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்களாம் இந்த ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு. தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும்.
எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்களாம் இந்த ராசிக்காரர்கள்!
Published on
Updated on
1 min read


ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு. தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். தனுசு ராசியின் அதிபதி பூரண சுபர் என்று வர்ணிக்கப்படுகின்ற குரு பகவான். 

பஞ்சபூத தத்துவங்களில் நெருப்பு ராசி. இது ஒரு ஆண் தன்மை நிறைந்த ராசி. இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் கூட ஆண்களில் மனோபாவத்தையே அதிகம் பெற்றிருப்பார்கள். அதிகாரம் அடக்குமுறை எண்ணங்கள் அவர்களிடம் அதிகம் காணப்படும். 

குருவுக்கு நெருங்கிய நண்பர் சூரியன். இங்கு நட்பு என்ற முறையில் நிற்பதால் தனுசு ராசியில் சூரியன் இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். 

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களிடம் செல்வம் ஏதாவது ஒருவகையில் கையில் இருந்துகொண்டே இருக்குமாம். 

தந்தையின் மீது மிகுந்த அன்பும் குடும்பத்தின் மீது மரியாதையும் கொண்டவர்கள். உறவினர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள். தனக்குச் சமமான அதிக நண்பர்களைக் கொண்டவர்கள். 

பூஜை புனஸ்காரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஞானிகளை சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடியவர்கள். கம்பீரமும், கனிவும் கலந்த குரல் வளம் கொண்டவர்கள். நம்பிக்கை உடைய இவர்கள் பிறர் செய்யும் உதவியை மறக்காதவர்கள்.

ஞானம் சம்பந்தமான தேடல்களையும், சாஸ்திரங்களையும் கற்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எந்நிலையிலும் தன்னிலை இறங்காதவர்கள். பலருக்கு முன் உதாரணமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள்.

பூர்வீக சொத்தும், சம்பாதிக்கும் வல்லமையும் கொண்டவர்கள். எதிலும் துரிதமும், வேகமும் உடைய இவர்களுக்கு அரசியல் தொடர்பு மற்றும் கௌரவப் பதவிகள் கிடைக்கும். தானம், தர்மம் வழங்குவதில் வல்லவர்கள். 

இவர்களுக்கு ராசி அதிபதியாக குரு இருப்பதால், செல்வச் செழிப்புக்கு ஒருபோதும் குறைவின்றி ஏதாவது ஒரு வகையில் வந்து சேருமாம். ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலம் இவர்களுக்கு வாழ்வில் பல ஏற்றங்கள் ஏற்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com