மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சந்திர கிரகணம்: காளஹஸ்தியில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம்

வரும் 27ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம்

Updated On :24 ஜூலை 2018, 2:19 am IST

வரும் 27ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சூரிய, சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் மற்ற கோயில்களில் கிரகண காலத்துக்கு 5 மணிநேரத்திற்கு
முன்பே நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்தவுடன் நடை திறந்து, சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்ற பின் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவது வழக்கம். 
எனினும், காளஹஸ்தி கோயிலில் மட்டும் கிரகண காலத்தில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் 27ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
கிரகணத்துக்கு இடையில் அதாவது நள்ளிரவு 1.53 மணிக்கு இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே கோயிலுக்கு வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.