திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர தெப்போற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை யானை வாகனத்தில் தாயார் மாட வீதியில் வலம் வந்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.
அதன் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மதியம் 3 முதல் 5 மணி வரை பத்மாவதி தாயாருக்கு நீராழி மண்டபத்தில் பல வகையான அபிஷேக பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பத்மசரோவரம் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் அமர்ந்து தெப்பம் அருகில் வரும் போது ஆரத்தி அளித்து வணங்கினர். தெப்போற்சவம் முடிந்த பின், தாயார் தனக்கு மிகவும் விருப்பமான யானை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். யானை வாகன சேவையைக் காண பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர்.
தெப்போற்சவத்தையொட்டி, திருக்குளம் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது. மேலும் தெப்போற்சவத்தைக் காண வரும் பக்தர்களுக்காக திருக்குளத்தில் கதாகாலட்சேபம், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் தேவஸ்தானம் நடத்தியது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு, தாயார் கோயிலில் சில ஆர்ஜித சேவைகளை கோயில் நிர்வாகம் ரத்து செய்தது. புதன்கிழமையுடன் தெப்போற்வம் நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









