காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வாரி இறைத்து மக்கள் நேர்த்திக்கடன்

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற மாங்கனி திருவிழா விமரிசையாக இன்று நடைபெற்றது. 
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வாரி இறைத்து மக்கள் நேர்த்திக்கடன்

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற மாங்கனி திருவிழா விமரிசையாக இன்று நடைபெற்றது. அம்மையாரின் வாழ்க்கை முறைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தில் திருவிழா நடைபெறுகிறது. 

இந்நிலையில் இன்று காலை பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மர்த்திக்கு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சிவபெருமான் காரைக்கால் அம்மையிடம் வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

குழந்தை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை இறைப்போருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இன்று மாலை 6 மணிக்கு ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், நாளை 5 மணிக்கு காரைக்கால் அம்மையார் எலும்புருவுடன் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com