வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் ஏப்ரல் 3-ல் பிரம்மோற்சவம் 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று விமரிசையாகத் தொடங்கியது.

News image
Updated On :22 மார்ச் 2018, 9:25 am

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று விமரிசையாகத் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்தர பிரம்மோற்சவ இடபக் கொடியேற்றம் மார்ச் 21 அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பவழக்கால் சப்பரத்தில் உற்சவர் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை என இருவேளையும் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.

முக்கிய நிகழ்வாக வரும் திங்கள்கிழமை (மார்ச் 26) 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல், 27-ம் தேதி தேரோட்டம், 29-ம் தேதி வெள்ளி மாவடி சேவை, 30-ம் தேதி பங்குனி உத்தர திருக்கல்யாணமும் விமரிசையாக நடக்கிறது.
 தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.