நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால பெரிய வியாழன் நிகழ்ச்சியாக சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், எண்ணற்ற மகிமைகளையும், புதுமைகளையும் கொண்டதாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போறப்படுகிறது. இப்பேராலயத்தில் ஆண்டுதோறும், புனித ஈஸ்டர் நிகழ்ச்சிகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, ஈஸ்டர் பண்டிக்கைக்கு முந்தைய தவக்கால தொடக்க நிகழ்வாக பிப். 14 -ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமைகளில் புனிதப் பாதையில் சிலுவைப் பாதை நிறைவேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் முன்பாக தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய வரலாற்றின் அடிப்படையில், இறைமக்கள் 12 பேரின் பாதங்களை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் மற்றும் பங்குத் தந்தை சூசைமாணிக்கம் ஆகியோர் கழுவி முத்தி செய்தனர்.
முன்னதாக, சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய உதவிப் பங்குத் தந்தையர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். புனித ஈஸ்டர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்பட திரளானோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


