விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

திருமலையில் சில்லறை தட்டுப்பாடு: கண்டுகொள்ளாத தேவஸ்தானம்

திருமலையில் சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விற்பனையின்போது பக்தர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. இதை தேவஸ்தான

Updated On :9 அக்டோபர் 2018, 2:37 am IST


திருமலையில் சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விற்பனையின்போது பக்தர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. இதை தேவஸ்தான அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று பக்தர்கள் குறைகூறுகின்றனர்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் கோயில் எதிரில் உள்ள அகண்டம் அருகில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்வது வழக்கம். ஏழுமலையான் தரிசனம் கிடைக்காத பக்தர்களும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்கின்றனர். இதற்காக பேடி ஆஞ்சநேயர் கோயில் அருகில் தேங்காய் விற்கும் கடைகள் உள்ளன. ஆனால் அவர்கள் அளவிற்கு அதிகமான விலையில் தேங்காய் விற்பனை செய்வதாக தேவஸ்தானத்திற்கு புகார் வந்துள்ளது.
இதை தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் சில்லறைக் கடைகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் உரிமத்தை ரத்து செய்தனர். தேவஸ்தான நிர்வாகமே ரூ.10 விலையில் ஒரு தேங்காய், கற்பூரம், ஊதுவத்தி உள்ளிட்டவற்றை ஒரு பையில் போட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்தது. 
இந்நிலையில், அவ்வப்போது தேங்காய் தட்டுப்பாடு காரணமாக நிலுவையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேங்காய் உடைக்காமல் பக்தர்கள் பலர் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் தேங்காய் விற்பனையை ஒப்பந்ததாரரிடம் தேவஸ்தானம் ஒப்படைத்தது. அவர்கள் ரூ.10 ஆக இருந்த தேங்காய் விலையை ரூ.15 ஆக உயர்த்தி கற்பூரம் மட்டும் அளித்தனர். 
அதன்பின் சிறிது சிறிதாக தேங்காய் விலை ரூ.20, ரூ.25 என உயர்ந்தது. சில நேரங்களில் சில்லறைக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பக்தர்களுக்கு உரிய சில்லறையை அளிக்காமல் ஒப்பந்ததாரர்கள் அவர்களை ஏமாற்றினர். ரூ.50 அளித்து தேங்காய் வாங்கினால் தேங்காய், கற்பூரத்துடன் ஒரு 50 பைசா விலையுள்ள கற்பூரத்தை அளித்து ரூ.20 நோட்டை கையில் வைக்கின்றனர். ஆனால் பக்தர்கள் அவசரம் காரணமாக அதை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். 
இவ்வாறு கொள்ளை லாபம் அடிக்கும் ஒப்பந்ததார்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பக்தர்கள் மட்டுமே. ஆனால் இந்த பகல் கொள்ளை குறித்து சிலர் முறையிட்டும் தேவஸ்தான அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.