மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட கிருஷ்ணர் கோயில்!

நேபாளத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 9:20 am

லலித்பூர்: நேபாளத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான லலித்பூர் கிருஷ்ணர் கோயில் பெரிய அளவில் சேதமடைந்தது. 

17-ம் நூற்றாண்டில் சித்தி நரசிங் மல்லால் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கலைக் கோயில் நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் அடைந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி புராதன கோயில் தாற்காலிகமாக மூடப்பட்டது.

இதன்பின், கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், கிருஷ்ண பகவான் அவதரித்த ஜென்மாஷ்டமி தினமான நேற்று திறக்கப்பட்டது.

புத்தம் புது பொலிவுடன் காட்சியளிக்கும் லலித்பூர் கிருஷ்ணர் கோயிலைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். இந்திய சீக்கியர் பாணியில் கட்டப்பட்டது இந்தப் புராதன கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.