செவ்வாய் ஜென்ம லக்னத்துக்கு 6-ம் இடத்தில் இருந்தால் ஏற்படும் நோய்கள்! 

சிலருக்கு நோய்கள் வந்தால் அவை விரைவில் குணமடைகின்றன. சிலருக்கு நீடிக்கின்றன.
செவ்வாய் ஜென்ம லக்னத்துக்கு 6-ம் இடத்தில் இருந்தால் ஏற்படும் நோய்கள்! 
Published on
Updated on
1 min read

சிலருக்கு நோய்கள் வந்தால் அவை விரைவில் குணமடைகின்றன. சிலருக்கு நீடிக்கின்றன. சிலர் ஆயுள் முழுவதுமே நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் ஜென்ம லக்னத்துக்கு ஆறாம் இடத்தில் இருந்தால் என்னென்ன உடல் கேடுகள் உண்டாகும், என்னென்ன நோய்கள் உண்டாகும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய். ஒருவரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம் இவர் தான். ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் - ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருப்பவர்கள் அபாயச்சூழல் நிறைந்து வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக்கூடியவர்கள். 

ஜாதகத்தில் செவ்வாய் பலத்துடன் இருந்தால் அவருக்குப் பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்படாது. அந்த ஜாதகர் மாடமாளிகை, அரண்மனை போன்ற வசதி வாய்ப்பைப் பெறுவர். பூமியால் யோகம் உண்டாகும். மொத்தத்தில் அந்த ஜாதகர் அனைத்துத் துறைகளிலும் கால்பதிப்பர். 

செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்கள் 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் செவ்வாய். ஒருவரது நோய் தன்மை, அதன் வீரியம் பற்றி உணர வைப்பது செவ்வாய் கிரகம். விபத்து நடப்பதற்கும், விபத்தால் ரத்தம் வெளியேறி மரணம் சம்பவிக்கவும் காரணமானவர். 

செவ்வாய் ஜென்ம லக்னத்துக்கு ஆறாம் இடத்திலிருந்தால் புண்கள், நெருப்பின் மூலம் காயங்கள் ஏற்படும். ரத்தப்போக்கு, கபம் ஆகியவை உண்டாகும். ரத்தசோகை, ரத்த புற்றுநோய், மஞ்சள் காமாலை, காரசாரமான உணவுகளால் உண்டாகும் நோய்கள், உடல் மெலிவு, கல்லீரல் மூலம் நோய்கள் ஏற்படும். 

அதிக உஷ்ணத்தால் கொப்பளம், கபம், ஜுவரம் போன்ற நோய்கள் ஏற்படும். அதுமட்டுமின்றி தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள், வெடி விபத்து, வாகனத்தில் தீ விபத்து, நோயால் தற்கொலை எண்ணம் தோன்றுவது, இடி, மின்னலால் மரணம் சம்பவிப்பது போன்றவை நிகழும். செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தெரிந்தோ தெரியாமலோ பிறரது தொற்று நோய் தாக்கக்கூடும். 

பரிகாரம் 

செவ்வாய் என்று நாம் குறிப்பிடும் அங்காரக பகவானுக்கு சாந்தி பரிகாரத்தை செய்யலாம். 

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெமஹ் ப்ரசோதயாத் 

என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லலாம். இதனால், வாழ்வில் தடைகள் நீங்கி, நோய்களில் இருந்தும் விடுபடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com