
மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெனன அவதார உற்சவத்தையொட்டி, புதன்கிழமை உறியடித் திருவிழா நடைபெற்றது.
மாமல்லபுரம் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணர் கோயிலில் 32-ஆவது கிருஷ்ண ஜெனன அவதார உற்சவத்தையொட்டி, 10 நாள் உற்சவம் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணருக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. 10-ஆவது நாளான புதன்கிழமை இரவு உறியடி விழா நடைபெற்றது. இதையொட்டி, உறியடி கிருஷ்ணர் கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். உறியடி இடத்துக்கு வந்தபின், உறியடி கிருஷ்ணர் கண்ணன் முன்னிலையில் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று உறியடித்தனர்.
திரளான பக்தர்கள் உறியடியைக் கண்டு கிருஷ்ணரை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







