ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நடிகைக்காக சட்டையைக் கழற்றிய சல்மான் கான்..! என்ன பிரச்னை?

நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆடையைக் கழற்றியது குறித்து...

Katrina Kaif (left) and Salman Khan in Bigg Boss

நடிகை காத்ரினா கைஃப், நடிகர் சல்மான் கான். - படங்கள்: இன்ஸ்டா / காத்ரினா கைஃப், ஜியோஸ்டார்.

Published On :

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் தனது மேலாடையைக் கழற்றி, “முடிந்தால் என்னையும் கேலி செய்யுங்கள்” எனக் கூறியது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகை காத்ரீனா கைஃப் மீதான சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் செய்த விமர்சனங்களுக்கு எதிராகவும் நடிகைக்கும் ஆதரவளிக்கவே சல்மான் கான் இவ்வாறு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை கத்ரீனா கைஃப் தாயாகவிருப்பதால் அவரது உடல் எடை கூடியிருக்கிறது. இதனை வைத்து தொழில்முறை புகைப்படக்காரர்கள் கேலி செய்யும் நோக்கத்துடன் நடந்துகொள்வது பாலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.

இதனைக் கண்டித்து நடிகர் சல்மான் கான் தான் பங்குபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆடையைக் கழற்றி ஆவேசமாகப் பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது:

யாராவது தயாகப்போகும் போது அவரைக் கேலி செய்வது ஏன்? கற்பமாகும்போது அனைவரது உடல் எடையும் கூடத்தானே செய்யும். அவர் மீண்டும் படம் நடிக்க வரும்போது ஃபிட்டாக மாறுவார்.

எனக்கு தற்போது 60 வயதாகிறது. என்னையும் வயதாகிவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். எதற்காக என்னைக் கேலி செய்கிறார்கள்? யார் செய்கிறார்கள் என்பது தெரியும். நான் அதற்கெல்லாம் எதிர்வினை புரிவதில்லை. எனக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அதனால், இதில் கவலைப்படத் தேவையில்லை. அதனால், பேசுபவர்கள் பேசட்டுமென விட்டுவிடுவேன்.

முதலில் உங்களை நீங்களே பாருங்கள். உங்களது உடல், உங்களது பெற்றோர்களைப் பாருங்கள். பின்னர் வருண் தவானை, சோஹலைக் கேலி செய்யுங்கள். நான் கிழிந்த காலணிகளை அணிந்துள்ளேன். அதனால் எவ்வளவு முடியுமோ கேலி செய்யுங்கள்.

தொழில்முறை புகைப்படக்காரர்கள் நடிகைகளின் இடுப்பு, கால்கள், பின்புறம் இருந்தெல்லாம் புகைப்படங்களை எடுக்கிறீர்கள். இதெல்லாம் எந்த நடிகைகளுக்கும் பெண்களுக்கும் பிடிப்பதில்லை. யார் என்று கண்டுபிடியுங்கள் என தலைப்பை இடுவது எவ்வளவு அசிங்கம்? என்ன மாதிரியான மனநிலை இது? எனக் கடுமையாக விமர்சித்தார்.

Summary

Salman Khan defends Katrina Kaif over online body-shaming; takes off his shirt and challenges trolls to mock him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.