திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.


திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று காலை ரத உற்சவம் நடைபெற்றது.
கோயிலின் பெரிய தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார்.
தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைதொடர்ந்து இன்று மாலை குதிரை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருள உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...