ரிஷப லக்னத்தில் ஜெனனமான ஜாதகர்களின் பலாபலன்கள்!

ரிஷப லக்னத்தில் ஜெனனமாகும் ஜாதகர்களின் ஜாதகப் பலாபலன்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 
ரிஷப லக்னத்தில் ஜெனனமான ஜாதகர்களின் பலாபலன்கள்!

ரிஷப லக்னத்தில் ஜெனனமாகும் ஜாதகர்களின் ஜாதகப் பலாபலன்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

ஒருவர் ஜனனம் ரிஷபம் லக்னத்தில் ஆகப்பெற்றால் ஜாதகர் பெரும்பாலான பெண்களால் விரும்பப்படுவர். ரிஷப லக்னத்தில் ஜனனமானவருக்கு பல தாரங்களை அடையப்பெறுவதோடு, தாரதோஷமும் அடையப்பெறுவர். மேலும், இவர்களது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, மறுமனைவியின் தொடர்பு இருக்கக்கூடும்.

குடும்பப்பற்று/பாசம்/நண்பர்களிடம் (ஆண்/பெண்) பாசம்/நாசம் பெற்றும் தயாள குணம், தர்மம் செய்தல், பிறரை வசப்படுத்தும் இயல்பான குணம், 6-12-29 ஆகிய வயதுகளில், கொடிய நோயினால் அவதிப்படல், மரண கண்டம் ஆகியவை அடையப்பெறுவர் என்பது ஜோதிட சாஸ்திரமாகும்.

ரிஷப லக்னத்தில் ஜனனம் ஆன ஒருவரின் ஜாதகத்தில் ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் (மாரகாபதி) 8-க்கு உடைய குருபகவான் கெடுபலன்களையே அளிக்கவல்லார் என்பதாகும். சனிபகவான் மற்றும் சுக்கிரன் ஜாதகர் தீர்க்க ஆயுள் பலம் 75 வயது முதல் 105 வயது வரை அடையப் பெறுவர் என்பதும் ஜோதிட சாஸ்திரமாகும். மேலும் குருதசை/சந்திரன் தெசா நடைபெறும் காலத்தில், ஜாதகர் தாங்கொனா கஷ்டநஷ்டங்கள், பொன்/பொருள் விரயம், உறவினர்கள்/நண்பர்களின் பகை பெறல், வழக்குகள்-வியாஜ்ஜியங்கள் ஆகியவை அடையப்பெறுவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6-8-12ல் ஸ்தானங்களில் குருபகவான்/சந்திரன் மறைந்திருந்தால் ஜாதகரின் குரு/சந்திரன் திசையில் பெரிய மனிதர்களின் பாசம்/நேசம், பிரபலமான ராஜயோகத்தை அடைந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை இறுதிவரை அடையப்பெறுவர்.

மேலும் ஜனன லக்னத்திற்கு, 9-ம் இல்லத்து அதிபதியும் (பாக்யாதிபதி), 10-ம் இல்லத்து அதிபதியும் (ஜீவனாதிபதி) ஆன, சனி மகாதிசையும் மற்றும் புதன் மகா திசையும்/இராகு மகாதிசையும்
நடைபெறுகின்ற காலங்களில் ஜாதகர் பலவிதமான யோகங்களை அளிக்கவல்லார் என்பதாகும். மேலும் ஜனன காலத்தில் லக்னம்/4-ம் இல்லம், 6-ம் இல்லம்/ 7-ம் இல்லம் மற்றும் 10-ம் இல்லங்களில், இராகு/சனிபகவான் அமையப்பெற்று அதன் தெசா நடைபெற்றால், ஜாதகர் மிக்க பிரபலமான யோகப்பலன்களை அடையப்பெற்று ஓர் உன்னதமான வாழ்க்கையை அடையப்பெறுவர் என்பதாகும்.

– ஜோதிடர் ஏ.கே ஆறுமுகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com