வீட்டில் திடீர் பிரச்னையா? அதற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்! 

நாள் முழுவதும் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலன் முழுமையாகக் கிடைக்காமல் போகும்.
வீட்டில் திடீர் பிரச்னையா? அதற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்! 

நாள் முழுவதும் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலன் முழுமையாகக் கிடைக்காமல் போகும். இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், கடைசியாக இப்படியும் இருக்கலாமோ என்று சிந்திக்கவைக்கும் ஒரு விஷயம் தான் கண் திருஷ்டி! 

நம் வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து செல்லும் போது ஒருசிலரின் தீயக்குணம், கெட்ட பார்வை நம் வீட்டின் மீது படும்போது கண்திருஷ்டியாக மாறும். அப்போது வீட்டில் திடீரென்று ஒருசில பிரச்னைகள் ஏற்படும். அதைவைத்து இது கண்திருஷ்டி தான் என்று தெரிந்துகொள்ளலாம். 

திடீர் பணவிரயம், பொருட்கள் உடைந்துபோதல், கணவன் மனைவிக்கிடையே காரணமில்லாத சண்டை, உடல் அசதி, காயங்கள், மருத்துவச் செலவு, உறவினருடன் பகை, கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை தொடர்ச்சியாக ஏற்படும். 

இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் திருஷ்டிக் கழிப்பது சிறந்த பரிகாரமாக அமையும். திருஷ்டிக் கழிக்க மாலை நேரம் சிறந்தது. திருஷ்டிக் கழிப்பவர் வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். செவ்வாய், வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்குத் திசையை நோக்கி திருஷ்டியை கழிக்கலாம். 

எலுமிச்சைப் பழத்தில் கற்பூரம் வைத்துச் சுற்றிப்போடலாம் அல்லது கல் உப்பைக் கொண்டு சுற்றிப்போடலாம். தெருமண், கடுகு, உப்பு, மிளகாய் இவற்றைக் கொண்டு சுற்றிப்போட்டு விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். அடுப்பு இல்லாதவர்கள் கொட்டாங்குச்சி பற்றவைத்து அதில் போட்டுவிடலாம். 

வீட்டு வாசலிலோ அல்லது வீட்டிற்குள்ளேயோ கண்களில் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி பூக்களை மிதக்க விடலாம். திருஷ்டியைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பூக்களுக்கு உண்டு. 

வீட்டு வாசலில் அலங்காரச் செடிகளை வளத்து வரலாம். ரோஜா செடியாவது வைக்கலாம். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருப்பதால் முள் செடிகள் திருஷ்டியைப் போக்கும். 

பூசனிக்காய், பூதங்களின் பொம்மை, செவ்வக வடிவில் கண்ணாடி, வாழைமரம் நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடலாம். மீன் தொட்டியை வைக்கலாம். வீட்டு வாசலில் கற்றாழை, எலுமிச்சைப் பழம், படிகாரம், பச்சை மிளகாய், கண் திருஷ்டி விநாயகர் இவற்றைத் தொங்க விடலாம். செவ்வாய், வெள்ளியில் சாம்பிராணி புகை போட்டு வரலாம். 

கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது என்றால் அது ஆகாய கருடன் கிழங்கு. இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இவ்வாறு வீட்டில் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் புகாமல், நம்மைப் பாதுகாக்கும். செய்துதான் பாருங்களேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com