சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2019, 1:09 pm

சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

மகர விளக்கு பூஜைக்காக பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்பட்ட திருவாபரணப் பெட்டி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு சந்நிதானம் வந்தடைந்தது.

ஐயப்பன் விக்கிரகத்துக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தோன்றியது. ஐயப்பா பக்தர்களின் சரண கோஷம் முழங்க அனைவரும் ஜோதியை தரிசித்தனர். 

மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம். மகர ஜோதியைத் தரிசிக்க அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.