திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருமலையில் ஆந்திர அமைச்சர் லோகேஷ் வழிபாடு

திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

News image

ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷுக்கு சுவாமி படம் வழங்கிய தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு.

Updated On :15 ஜனவரி 2019, 2:38 am IST


திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர முதல்வர் குடும்பத்தினர் தங்களின் சொந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி அவர்களின் குடும்பத்தினரும், நாரா லோகேஷ், அவரது மனைவி பிராமணி, மகன் தேவான்ஷ் ஆகியோர் திருப்பதியை அடுத்த நாரவாரிபள்ளியில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.
திங்கள்கிழமை காலையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடிய பின், அமைச்சர் லோகேஷ் தன் குடும்பத்தினருடனும், ஆந்திர அமைச்சர்கள் சிலருடனும் காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு சிறப்பு பிரசாதங்களையும், சுவாமி படத்தையும் வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.