காஞ்சிபுரம் மூலவரை தரிசிக்க பட்டாச்சாரியார்கள் வலியுறுத்தல்!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் மூலவரை தரிசிக்க அனுமதி அளிக்குமாறு பட்டாச்சாரியார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மூலவரைத் தரிசிக்க அனுமதி அளிக்குமாறு பட்டாச்சாரியார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்திவரதர் பெருவிழா 24-வது நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட சில தினங்களைத் தவிர மற்ற நாள்களில் வரதர் கோயிலில் மூலவர், உற்சவர், தாயார் சன்னிதிகளுக்குச் சென்று பக்தர்கள் தரிசிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருந்தது.
இதனிடையே, பக்தர்களின் வருகை அதிகரித்து வந்ததால் பக்தர்கள் வெளியேறாமல் கோயில் வளாகத்துக்குள்ளேயே நீண்ட நேரம் இருந்தனர்.
அவர்களை வெளியேற்றுவது காவலர்களுக்கு சவாலாக இருந்தது.
இதையடுத்து விழா முடியும் வரை, பக்தர்கள் தாயார், மூலவர் சந்நிதிகளுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நாள்தோறும் வழக்கமாகச் சுவாமியைத் தரிசனம் செய்யும் பட்டாச்சாரியார்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
போலீஸார் இதற்கு தொடர்ந்து அனுமதி மறுத்ததையடுத்து பட்டாச்சாரியார்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பட்டாச்சாரியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...