/

கும்பகோணம் அருள்மிகு மகா மாரியம்மன் மகா காளியம்மன் ஆலயத்தில் செடல் திருவிழா

கும்பகோணம் நகரத்தின் மாதளம்பேட்டை தெருவில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமகா காளியம்மன்

News image
Updated On :7 மே 2019, 6:01 am

குடந்தை சரவணன்

கும்பகோணம் நகரத்தின் மாதளம்பேட்டை தெருவில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத் சித்திரை பெருவிழா உற்சவத்தினை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (மே 4) இரு உற்சவ அம்மன்களும் சிறப்பு மலர் அலங்காரத்தில் மங்கல இன்னிசை முழங்க வாண வேடிக்கையுடன்   திருவீதியுலா திருக்காட்சி நடைபெற்றது.

இதில் பலவித வேசம் கட்டிய வேடதாரிகளின் படை சூழ நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிறைவு பெற்றது. அதன் பின்  திருக்கோயில் அருகில் கழுவேற்றம் விழா மிக சிறப்பாக  நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் திரளாக கலந்து   கொண்டு அம்மன்களை தரிசனம் செய்தார்கள் 

Story image

ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கரகம், காவடி, பல்லாக்கில் அம்மன்கள் புறப்பாடு ஆகியவை கும்பகோணம்  அரசலாற்றிலிருந்து இரவு ஏழு மணிக்கு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை செடல் சுற்றும் திருவிழா நடைபெற்றது. அம்மன்களுக்கு பள்ளையாடியும் அதன் பின் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழாவானது நிறைவடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.