
உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் 12 வகையான ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து வருகை புரிந்து தரிசித்துச் செல்கின்றனர்.
இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் 12000 உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், இன்று காலை 5.35 மணிக்கு கோயில் நடை பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
மேலும், புண்ணிய தலங்களாகக் கருதப்படும் கங்கோத்ரி, யமுனோத்ரி கடந்த மே 7-ம் தேதி (அக்ஷய திருதியை) அன்று திறக்கப்பட்டது. புகழ்பெற்ற விஷ்ணு கோயிலான பத்ரிநாத் நாளை காலை திறக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 7.32 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு வந்து தரிசித்து சென்றுள்ளனர். அதன்படி, இந்தாண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு புண்ணிய தலங்களும் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடை அடைக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.