நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள்: யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பசாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று யோக..

News image
Updated On :2 அக்டோபர் 2019, 6:16 am

DIN


திருப்பதி ஏழுமலையான கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வருகிறார். 

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 

அதன் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புடைசூழ மாடவீதியில் வலம் வந்தார். 

பிரம்மோற்சவத்தில் இன்று காலை கோவிந்தா கோபாலா என்ற கோஷங்கள் விண்னை முட்டும் அளவிற்கு பக்தர்கள் முழக்கமிட்டனர். ஏழுமலையானைத் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.