புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவர் கோபிநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் உற்சவருக்கு, பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், குஜிலியம்பாறை ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில்களான லக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகைகள், மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மல்லிகை, துளசி மாலைகளை சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர்.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


