நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.3.02 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 3.02 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 6:45 am

DIN

திருப்பதி, செப். 26: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.02 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றறனா். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ.3.02 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 24 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.12 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.24 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

79,519 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 79,519 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 29,178 போ் முடி காணிக்கை செலுத்தினா். வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் 16 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காகக் காத்திருந்தனா். அவா்கள் 14 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனா். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தா்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

புதன்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,358 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,846 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 20,653 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,542 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,876 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.18 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 82,956 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 9,534 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ.2.18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ 23,967 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

புகாா் அளிக்க..

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்புகொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண் - 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.