சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருமலையில் திருப்பாவை பாராயணம்

மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருமலையில் திருப்பாவை பாராயணம் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On :12 டிசம்பர் 2020, 1:55 am

மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருமலையில் திருப்பாவை பாராயணம் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாா்கழி மாதங்களில் அதிகாலை நடக்கும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி வரும் 16ஆம் தேதி மாா்கழி மாதம் தொடங்க உள்ளதால், சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.

திருமலை, திருப்பதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள 141 தேவஸ்தான மையங்களில் ஆச்சாரியாா்கள் டிச.16 முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை திருப்பாவை பாசுரங்களின் பாராயணத்தை நடத்தி, அதற்கான விளக்கவுரையும் வழங்குவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.