கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் 29,914 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 29,914 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,882 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:15 am

DIN

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 29,914 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,882 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்போருக்கு தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.