சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆம்பூர் அருகே மார்கழி மாதப் பிறப்பையொட்டி திருவீதியுலா வந்த நடராஜர்

மார்கழி மாதப் பிறப்பையொட்டி ஆம்பூர் அருகே சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.

News image

ஆம்பூரில் திருவீதி உலா வந்த நடராஜர்

Updated On :16 டிசம்பர் 2020, 6:09 am

மார்கழி மாதப் பிறப்பையொட்டி ஆம்பூர் அருகே சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.

ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சியில் உள்ளது பள்ளித்தெரு. இன்று புதன்கிழமை மார்கழி மாதம் பிறந்ததை ஒட்டி இந்த ஊரில் உள்ள சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.

Story image

அதிகாலை 4 மணிக்கு திருவீதி உலா தொடங்கியது. தேவார திருவாசக மந்திரங்கள் ஓதியும், பஜனைப் பாடல்கள் பாடியவாறும் பள்ளித் தெரு, காந்திநகர், நெமிலிபுரம்  வீதிகள் வழியாக நடராஜர் திருவீதியுலா வந்தார்.
காலை 7 மணிக்கு சிவாலயம் அருகே திருவீதியுலா நிறைவு பெற்றது.

மார்கழி மாதம் முழுவதும் நடராஜர் திருவீதியுலா வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என சிவனடியார் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.