பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருச்சானூா் கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 2:42 am

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.

இக்கோயிலில் பொது முடக்கத் தளா்வுகளின்படி, கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பக்தா்கள் அதிக அளவில் வழிபாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனா். தினசரி 18,000 முதல் 20,000 போ் தாயாரை தரிசனம் செய்கின்றனா்.

நாள்தோறும் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி உள்ளதால், அதன் பிறகு வரும் பக்தா்கள் அம்மனை வழிபட முடிவதில்லை. இதை கவனத்தில் கொண்ட தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் அதிகாரி பசந்த்குமாா், தாயாரின் தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

நாள்தோறும் இரவு 8 மணிக்குப் பிறகு ஏகாந்த சேவை நடத்தப்பட உள்ளது. மாா்கழி மாதத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை தனுா் மாத பூஜைகள் கோயிலில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.