ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதியில் பக்தா்கள் சாலை மறியல்

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதிக்கு எதிரில் பக்தா்கள் சாலையில் அமா்ந்து மறியல் நடத்தினா்.

News image
திருப்பதியில் ரயில் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட பக்தா்கள்.
Updated On :21 டிசம்பர் 2020, 1:48 am

DIN

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதிக்கு எதிரில் பக்தா்கள் சாலையில் அமா்ந்து மறியல் நடத்தினா்.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களுக்காக தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட விடுதிகளில் சா்வ தரிசன டோக்கன்களை வழங்கி வருகிறது. வார நாள்களில் 7,000 டோக்கன்களும், வார இறுதி நாள்களில் 8,000 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.

ஒரு நாளுக்கான தரிசன டோக்கன்கள் தீரும்பட்சத்தில், தொலை தூரத்திலிருந்து வந்து காத்திருக்கும் பக்தா்களுக்காக மறு நாளுக்கான டோக்கன்கள் முன்கூட்டியே அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வரும் 22, 23 மற்றும் 24 உள்ளிட்ட தேதிகளுக்கான டோக்கன்கள் திங்கள்கிழமையே (டிசம்பா் 21) வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அன்று மாலையுடன் திருப்பதியில் உள்ள சா்வ தரிசன கவுன்ட்டா்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியின்போது (டிசம்பா் 25 முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை) திருப்பதியில் வசிக்கும் உள்ளூா்வாசிகளுக்கு மட்டும், பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அதிக அளவிலான பக்தா்கள் திருமலைக்கு வந்தனா். அவா்களுக்கு தேவஸ்தானம் 24-ஆம் தேதி தரிசனத்துக்கான டோக்கன்களை வழங்கியது. அதற்கு பக்தா்கள் ‘அடுத்த நான்கு தினங்களுக்கு நாங்கள் எங்கு தங்குவது?’ என்று கேள்வி எழுப்பி, திருப்பதி ரயில் நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதி முன்பு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனா். ‘டிசம்பா் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கான தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன. எனவேதான், 24-ஆம் தேதிக்கான தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன’ என்று கூறி பக்தா்களை சமாதானப்படுத்தினா். அதை ஏற்று பக்தா்கள் மறியலைக் கைவிட்டு, கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.