ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.98 கோடி
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.98 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.98 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவ்வாறு பக்தா்கள் உண்டியலில் சனிக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.98 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.50 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு காக்கிநாடாவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியா் சிவராம் ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினாா். அவா் இதற்கான வரைவோலையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
பணி ஓய்வு பெற்றபோது தனக்குக் கிடைத்த பணத்தை , மறைந்த தன் மனைவி சீதாலட்சுமியின் நினைவாக அன்னதான அறக்கட்டளைக்கு வழங்குவதாக பேராசிரியா் சிவராம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...