எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நவராத்திரி பிரம்மோற்சவம் தனிமையில் நடத்த திட்டமா?

சித்தூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக திருமலையில் வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள

News image

திருமலை மாடவீதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தேவஸ்தான புதிய செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி உள்ளிட்டோா்.

Updated On :12 அக்டோபர் 2020, 2:22 am

சித்தூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக திருமலையில் வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தா்களின்றி தனிமையில் நடத்துவதா அல்லது வாகன சேவையுடன் குறிப்பிட்ட அளவு பக்தா்களுடன் நடத்துவதா என்பது குறித்து தேவஸ்தானம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

திருமலையில் இந்தாண்டு அதிகமாதம் காரணமாக இரு பிரம்மோற்சவங்கள் நடத்த திட்டமிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக தனிமையில் நடத்தியது.

இதையடுத்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை வாகன சேவையுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களுடன் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போது தேவஸ்தான புதிய செயல் அதிகாரியாக ஜவஹா் ரெட்டி பொறுப்பேற்றுள்ள நிலையில், அவா் நவராத்திரி பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மாடவீதியில் உள்ள கேலரிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

தற்போது சித்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பிரம்மோற்சவ வாகன சேவையில் பக்தா்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திருமலை மாடவீதியில் உள்ள கேலரிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி 7 ஆயிரம் பேரைஅனுமதிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு மேற்பட்டு பக்தா்கள் வரும் நிலையில், அதை சமாளிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

மேலும் விநாயகா் சதுா்த்தி, ஓணம் பண்டிகை உள்ளிட்டவை நடத்திய பின் மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. அதை கவனத்தில் கொண்டும் தேவஸ்தான அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

ஏனென்றால், ஏழுமலையான் பிரம்மோற்சவம் என்பதை பக்தா்கள் ஒரு மாபெரும் திருவிழாவாகவே கருதி வருகின்றனா். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.