ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது.
அபிஷேக் சர்மா அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கிளாசன் 39 ரன்களும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷஷாங் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் மிகவும் அபார தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 99 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா 20 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன் சிங் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், கூப்பர் கானலி 11 ரன்களும், நேஹல் வதேரா 14 ரன்களும் எடுத்தனர். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஷஷாங் சிங் 9 பந்துகளில் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் ஷிவாங் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்ஷ் துபே ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மழை காரணமாக பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
In the IPL series, the Punjab Kings defeated Sunrisers Hyderabad by 6 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்; ராஜஸ்தானுக்கு 223 ரன்கள் இலக்கு!
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




