Enable Javscript for better performance
12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020- Dinamani

சுடச்சுட

  

  12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020

  By - ஜோதிட சிரோன்மணி தேவி  |   Published on : 01st September 2020 03:36 PM  |   அ+அ அ-   |    |  

  rahu_ketu

   

  ராகு - கேது என்பவர்கள் சாயா கிரகம். அவை சர்ப்ப கிரகம் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

  வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் ஒன்றாம் தேதியும் 2020, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 23, செப்டம்பர் 2020-லும் ராகு மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கும், கேதுவானவர் தனுசுவிலிருந்து விருச்சிகத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

  இந்த பெயர்ச்சி ஒன்றரை காலம் ஆகும். ராகு, கேதுவைத் தவிர மற்ற வருட கிரங்களான குரு, சனி ஆகியவற்றையும் வைத்துதான் பலன்களைச் சொல்ல வேண்டும். 

  இந்த பெயர்ச்சி ஒருசில ராசிக்காரர்களுக்கு ராகு ஒருவித நல்ல பலனையும் கேதுவானவர் ஒருசில நற்பயன்களைத் தரவல்லவர். முக்கியமாக ராகு-கேது பெயர்ச்சி உங்கள் செயலின் தாக்கம் 30% மட்டுமே பலன் தரவல்லது உங்களுடைய ஜனன ஜாதகமே 100% தசைபுத்தி வாயிலாகப் பலனை சொல்லும். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  மேஷ ராசிக்காரர்கள் 2ல் ராகுவும் 8ல் கேதுவும், 9ல் குருவுடன் 10ல் சனியும் சஞ்சரிக்கும் காலம் என்னென்ன பலாபலன் என்று பார்ப்போம்.

  • மேஷ ராசிக்காரர்கள் மன தடுமாற்றம் மற்றும் செயல் ஓட்டம் ஓடி களைப்பாறும் காலம் இந்த ராகு பெயர்ச்சி.
    
  • 2இல் ராகு இருப்பது பேச்சில் நிதானம் இருக்காது, முக்கிய குடும்ப உறவில்  உள்ளவர்களிடம்  பேசும்போது பலமுறை பார்த்து பேசவேண்டும்.
    
  • திருமணம் என்ற போது புது உறவு வர இருக்கும் நேரம் இது.
    
  • குருவின் பார்வை சந்திரனை பார்த்துள்ளது முக்கியமாக 5ம்   பாவத்தோடு தொடர்பு உள்ளது. குழந்தை பெரு இல்லாவதற்கு கட்டாயம் குருவின் அருளால் மழலை சத்தம் கேட்கும் நேரம்.
    
  • சுக்கிரன் வீட்டிற்கு ராகு வரும் காலம் பணம், வீடு பாக்கியம் மற்றும் பொருள் சேரும் காலம். தன ஸ்தானத்தில் ராகுவும்,  8ல் கேது ஜாதகருக்கு குரு சம்பத்தோடு கேது அமர்ந்தால் பல்வேறு வழிகளில் பணம் வங்கியில் சேர்க்கும் பாக்கியம் கிட்டும் அது உங்கள் தசா புத்திக்கு ஏற்பது.
    
  • அஷ்டமாதிபதி பாதகாதிபதி பார்வையோடு தொடர்பு ஏற்படுவதால், நோய், நீர், நெருப்பு மற்றும் ஒரு சில ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவும் மருத்தவ சிகிச்சையில் இருப்பவர் ஆபரேஷன் போன்ற நிகழ்வுகளும் ஏற்படும். அதுவும் தொடர் உடல் சார்ந்த பிரச்னையில் இருப்பவர்கள்  நல்ல ஒரு தீர்வு உடலில் ஏற்படும்.
    
  • உங்கள் ஜாதகத்தில் 2ம் அதிபதி சரியாக இல்லையென்றால் திருமணம் உறவில் பிரிவு விரிசல் என்று செல்லும் நேரம் இது.  திருமணம் ஆனவர்கள் முடிந்தவரை அமைதிக்காகவும் தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்கவேண்டும்.
    
  • தொழில் முடங்கி இருந்தவர்கள் முடிந்த வரை உங்களுக்கு உயர்வுகள் இருக்கும். உங்களுடைய கடன் சார்ந்த பிரச்னைகளை கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு கிட்டும்.
    
  • ராகு செவ்வாய் சாரத்தில் சுக்கிரன் வீட்டில் இருந்து அவர் நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு கட்டும் யோகம் ஏற்படும்.
    
  • தாயாரின் உடல் நிலையை பாதிக்கும் நேரம். ஒரு சில பிரச்னை இருந்தாலும் தாயாரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
    
  • குழந்தைகள் படிப்பில் கொஞ்சம் தெளிவு ஏற்படும். உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாட்டு நிகழ் நிலை (online) படிப்பை படிப்பார்கள்.

  பரிகாரம்

  • 1. முருகனுக்கு செவ்வாய்க்கிழமை பால் பாயசம் நிவேதனம் செய்து மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.
    
  • 2. வைதீஸ்வரன் கோவிலுக்கு இந்த ஒன்றரை வருடத்திற்குள் சென்று உப்பு மிளகு வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வரலாம்.
    
  • 3. மருத்துவத்திற்கு ஏழை எளியோருக்கு உதவலாம், முக்கியமாக ரத்த தானம் செய்யலாம்.

  ***

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  ரிஷப லக்கின/ ராசிக்காரர்கள்  1ல் ராகுவும், 7ல் கேதுவும், சஞ்சரிக்கும் காலம் என்ன பலாபலன் என்று பார்ப்போம்.

  • அதீத அழகை மேம்படுத்தும் மற்றும் உணவு பிரியர் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப ஒரு சில யோகம் அமையும்.
    
  • மன ரீதியாக பிரச்னை அதிகப்படுத்தி உங்களை வலுப்படுத்தும் நேரம் இது. ஒரு செயலை செய்யும் பொழுது பலமுறை யோசித்து செயல்படுத்தவும். வயதானவர் மற்றும் பெண்களாக  இருந்தால் தாக்கம் கொஞ்சம் அதிகம் இருக்கும்.
    
  • தன்னிலை உயரத்தை அடைய ராகு தவறான கோணத்தை  காட்டும். உங்கள் செயலை நேர்மறை ஆற்றலை கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
    
  • ராகுவிற்கு ஏற்ற வீடு ரிஷபம், ஆடம்பரத்தை தரும். ராகு வரும் காலம் திருப்தி மற்றும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.
    
  • மருத்துவம் கண்டுபிடிப்பதில் சுக்கிரனுக்கு முக்கிய பங்கு. சந்திரன் உச்சம் பெரும் ராசி, ரிஷப அதிபதி சுக்கிரன் வீட்டில் ராகு வரும் காலம் பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்பு நடந்துகொண்டே இருக்கும் ஒரு தீர்வும் கிட்டும்.  
    
  • திருமணத்திற்கான முயற்சி எடுக்கலாம். ராகு கேது தோஷம் பெற்றவர்கள் நிவர்த்தி பெரும் காலம். ஒரு சிலருக்கு களத்திர பிரிவை ஏற்படுத்தும் நேரம். 
    
  • அஷ்டமத்தில் இருக்கும் குரு உங்களுக்கு பெரும் அவமானம் பிரச்னை என்று கொடுத்திருப்பார் அவர் ஓரிரு மாதங்களில் ஒன்பதில் நகர்ந்து  உங்கள் ராசியை பலப்படுத்த செய்வார் .
    
  • மூத்த சகோதரர்கள், தாய் மற்றும் உங்களோடு ஒரு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் காலம். 
    
  • ஒருசில காலங்களில் மேல் குரு நீசபங்கம் ஆகும் நேரும், சனி உடன் சேரும்போது தொழிலில் ஒரு சில சிறு மாற்றம் நிகழும்.
    
  • குழந்தைகள் படிப்பில் மற்றும் அவர்களுக்கு தேவையான எதிர்கால தேவைக்கு  கவனம் செலுத்துவீர்கள்.

  பரிகாரம்

  • 1. பஞ்சமியில் கருடாழ்வார் தரிசனம் முக்கியம். நாச்சியார் கோவில் கோவில் சென்று வழிபடு செய்வது நன்று,
    
  • 2. மஹாலஷ்மி, அஷ்ட லக்ஷ்மி பூஜை செய்வது நன்று.
    
  • 4. மன ரீதியான யோகா மற்றும் நமச்சிவாயா மந்திரம் உங்களுக்கு உதவும்.
    
  • 5. அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட ஸ்வாமியை தரிசிக்கலாம். அத்தி காய் மற்றும் பழம் உணவில் உட்கொள்ள வேண்டும்.

  ***

  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  அன்பார்ந்த மிதுன ராசிக்காரர்கள்  12ல்  ராகுவும்,  6ல் கேதுவும், 7ல் குருவும் 8ல் சனியும்  சஞ்சரிக்கும் காலம் என்ன பலாபலன் என்று பார்ப்போம்.

  மிதுன ராசிக்காரர்களை புரட்டிப்போட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்ச கொஞ்சமாக உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். ஆனாலும் ராகு நிற்கும் சாரம் செவ்வாய் அதனால் சண்டை சச்சரவு, நிம்மதியற்ற  தூக்கம் இருக்கும். இதுவும் ஒருசில மாதத்திற்கு பிறகு சரியாகிவிடும்.

  • நீண்ட நாள் வழக்கு சார்ந்த பிரச்சனை ஒருசிலருக்கு மருத்துவ சிகிச்சை வாயிலாக தீர்வுக்கு கொண்டுவரும்.
    
  • பெற்ற பிள்ளைகளால் பிரச்னை ஏற்படும்.  வெளி தேசத்தில் இருப்பவர்கள் தாய் தந்தையுடன் சேரும் காலம் வரப்போகிறது.
    
  • அடுத்த வருட ஆரம்ப கட்டத்தில் உங்கள் விற்காத பழைய வீடு விற்கப்படும். வீண் செல்வுகளை செய்ய வேண்டாம். சேமிப்பு நிதி கணக்கில் பணம் குறையும்.
    
  • கணவன் மனைவி அனியோனியம் அதிகரிக்கும்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் நேரம் இது.
    
  • 4இல் கேதுவின் பார்வை என்பது வாடகை வீடு,  வண்டி சார்ந்த பிரச்னை ஏற்பட்டு பின்பு உங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொள்வீர். உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
    
  • மகிழ்ச்சியை தள்ளி வைத்து உழைப்பில் அதிக கவனம் செலுத்தும் நேரம்.
    
  • சொந்த தொழில் செய்ப்பவர்கள் வெளிநாட்டு தொடர்பு கொண்டவர்கள் உங்கள் முயற்சி அவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் காலம். ஆனால் வேலையில் மற்றும் சொந்த தொழிலில் கவனம் தேவை.
    
  • போட்டியாளர்கள் உங்களுக்கு இருப்பார்கள் இருந்தும் எதிரிகளை வெற்றி பெறுவீர். உடல் சார்ந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது கவனம். 

  பரிகாரம் 

  1.  மகா விஷ்ணுவை புதன் கிழமைகளில் தரிசிக்க வேண்டும்

  2. சங்கட சதுர்த்தியில் அருகம்புல் வாங்கிக்கொடுத்து வினாயகரை தரிசிப்பது நன்று

  3. பெரிய மகான்கள் வழிபடு அவசியம்.

  4. தெய்வீக  பிரசாரங்களில் கலந்துகொண்டு மகான்கள் பேசுவதை கேட்கவேண்டும்

  ***

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  அன்பார்ந்த கடக ராசிக்காரர்கள் 11ல் ராகுவும் 5ல் கேதுவும், 6ல் குருவுடன் 7ல்  சனியும் சஞ்சரிக்கும் காலம் என்ன என்ன பலா பலன் என்று  பார்ப்போம்.

  • இந்த சாயா கிரகங்கள் 3,6,11  பாவங்கள் சிறந்தது. முக்கியமாக கடக ராசிக்கு இது மிக பெரிய யோகத்தை ராகுவால் ஏற்படும்
    
  • வேலை செய்யும் இடத்தில நிறுவன உங்களுக்கு கௌரவமான நிலை, லாப கரமான நிலை உருவாகும் காலம் இன்னும் ஓரிருக் காலத்தில் குருவின் அருளோடு நற்பயன் நடைபெறும் .
    
  • கடகம் மற்றும் ரிஷப தொடர்பு சந்திரனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதனால் வீட்டில் பாசம் இருக்கும். தாய் மூலம் லாபம், தாயின் உறவால் ஜாதகர் சந்தோஷம் அடைவர்.
    
  • உங்களுக்கு கண்ட சனி மற்றும் கேதுவின் தாக்கம் இருப்பதால் பிரயாணத்தில் கவனம் தேவை. திருமணம் தாமதமாகும்.
    
  • கேது 5ல் உச்ச நிலையில் செவ்வாய் வீட்டில் இருப்பது ஒருவித உடல் உபாதைகள் ஏற்படுத்தும் முக்கியமாக தைராய்டு சுரப்பி, வயிற்றில் பிரச்னை மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என்று ஏற்படும் நேரம் கவனம் தேவை.
    
  • சிறு சிறு உடல் உபாதைகளுக்கு முடிந்த வரை சித்த மருத்துவத்தை பின்பற்றவும்.
    
  • உங்கள் தந்தைக்கு, சகோதரர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும் கவனம் தேவை.
    
  • குழந்தைகளுக்கு படிப்பாற்றல் நன்றாக இருக்கும். பெற்றோர்கள் அவர்கள் மீது கவனம் வைக்கவும். 
    
  • இளைஞர்களுக்கு  காதலில்  நாட்டம் இருக்கும். காதல் என்னும் வலையில் கேது சிக்க வைப்பார். சரியான முறையில் உங்கள் வயதிற்கு ஏற்ப முடிவு எடுக்கவும். 

  பரிகாரம்

  • வீட்டில் குலசாமிக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
    
  • தினமும் வினாயகரை தரிசனம் செய்து வணங்கிவிட்டு செல்ல வேண்டும்.
    
  • திருத்தலைச்சங்காடு,  திருநாலூர் மயானம், சந்திரமௌலீஸ்வரர்.
    
  • கோவிலுக்கு சென்று பசு நெய் தீபம் ஏற்றி உங்களுக்கு முடிந்ததை காணிக்கையாக செலுத்த வேண்டும்.
    
  • பால், கல்கண்டு சாதம், தயிர்ச்சாதம் மற்றும் தேங்காயால் செய்த உணவுகளை பௌர்ணமி காலத்தில் அல்லது உங்கள் நட்சத்திர நாளில் பிரசாதமாக கொடுக்கவும்.

  ***

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  அன்பார்ந்த சிம்ம ராசிக்காரர்கள் 10ல் ராகுவும் 4ல் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.

  • எவருக்கும் தலை வணங்கா கம்பீரமான தோற்றம், பேச்சு, மற்றும் பெரியவர் ஆசீர்வாதம் பெற்ற சிம்ம ராசிக்காரர்களே யோகம் தரும் காலம் இது .
    
  • சிம்மத்திற்கு 10ம் பாவத்தில் சுக்கிரன் வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார்.  பன்மடங்கு பல்வேறு விஷயங்களில் உங்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும்.
    
  • புதிய அறிவாற்றல் கொண்டு விவசாயம், கடல் சார்ந்து தொழிலில் இருப்பவர்கள், சினிமா, டெக்னாலஜி துறையில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
    
  • வீட்டில் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளின் மூலம் சந்தோஷத்தை ஏற்படுத்து.
    
  • ஒரு சில வழக்கு பிரச்னை ஏற்படும். தாயாரோடு ஒரு பிணக்கு ஏற்படும். தாய்க்கு தேவையன கடமையை செய்ய வேண்டும்.
    
  • அஷ்டமத்தை ராகு சனி பார்வை இடுவது அவ்வளவு நல்லது அல்ல. வியாதிகள் கொஞ்சம் தீவிரம் காட்டும் நேரம். முடிந்தவரை மாஸ்டர் checkup செய்யவும்.  
    
  • வீட்டை புதுப்பிக்கும் நேரம். வீட்டில் வாஸ்து பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூர்விக சொத்து பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    
  • அரசாங்க துறையில் வேலைக்கு காத்திருப்பவர்கள் வேலை கிடைக்கும் காலம். இந்த பிரபஞ்ச சக்தியால் புதிய மாறுபாடு அரசியலில் நிகழும்.
    
  • கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஆனால் அதிக வட்டியை வாங்கி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

  பரிகாரம்

  • 1. கோதுமையால் ஆன உணவு,  பரங்கிக்காய்  தானம் செய்வது நன்று.
    
  • 2. குலசாமிக்கு படையல் போடுவது, நேர்த்திக்கடன் செய்வது நன்று.
    
  • 3. திருமீயச்சூர் லலிதாம்பிகை அல்லது சூரியன் உதிக்கும் ஸ்தலம்  சென்று தரிசித்து வரவும்.
    
  • 4. பழம் பெரும் சிவன் கோவில் கட்ட பணமாகவோ, பொருளாகவோ கொடுக்கலாம்.

  ***

  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  அன்பார்ந்த கன்னி ராசிக்காரர்கள் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் என்ன பலாபலன் என்று பார்ப்போம்.

  • மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆற்றல் கொண்ட இலக்கிய மனம் கொண்ட கன்னி ராசி காரர்கள் முயற்சி மூலதனமான கொண்டு உயரும் ஒரு பொற்காலம். அவரவர் பாக்கியத்திற்கு ஏற்ப உங்களுக்கு உரிய பலம் உங்களை உயர்த்த போகும் நேரம்.
    
  • வீட்டில் உள்ள தலைவனால் இருந்தால் உங்களுக்கு குலசாமி அருள் கிட்டும் நேரம், அதுவும் உங்கள் பூர்வ புன்னியத்தின் கர்மாவிற்கு ஏற்ப இருக்கும்.
    
  • தந்தை தொழில் உங்களுக்கு உதவும் காலம் இது. தொழிலில் முடங்கி இருந்தவர்கள் கொஞ்சம் மூச்சு விடும் நேரம் சனிபோல் ராகு அதனால் வேலையில் நாட்டம் அதிகம் இருக்கும், அதனால் பொருள் சேர்க்கை இருக்கும்.
    
  • 3இல் கேது நன்று வாக்கில் தெளிவு இருக்கும்,  தைரியதோடு  செயல் படுவீர்கள். எந்த முயற்சியும் சற்று உயர்வு பெரும்.
    
  • பழய வீடு, நிலம் விற்காதவர்களுக்கு உங்கள் சொத்து கணிசமான விலையில் விற்கும் நேரம்.புதிய ஒரு investment  இருக்கும்.
    
  • குடும்பம் என்ற கர்மா உங்களை உட்படுத்தும் அதாவது திருமண பந்தம் உங்களுக்கு புதிதாக ஏற்படுத்தும்.
    
  • முகம், பற்கள் மற்றும் காது மூக்கு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
    
  • தந்தைக்கு ஒருவித கண்டம் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    
  • பழைய வீடு வாகன கடன் சிறுக சிறுக அடைத்து விடுவீர்கள்.

  பரிகாரம்

  • 1.  தாயாரோடு சேர்ந்து இருக்கும் பெருமாளை வணங்குவது நன்று.
    
  • 2. பச்சை பயிறு, உளுந்து சார்ந்த உணவை தனமாக கொடுக்கவும்.
    
  • 3. இஷ்ட தெய்வத்தை தினசரி பிராத்தனை செய்ய வேண்டும்.
    
  • 4. திருப்பதி சென்று வந்தால். ஒரு மிகப்பெரிய திருப்பம் உண்டு.
    
  • 5.  மாமரத்தை வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று நடுவது நன்று.

  ***

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  • அன்பார்ந்த  ராசிக்காரர்கள் 8ல் ராகுவும்,  2ல் கேதுவும்,  3இல்  குரு,  4இல் சனி  சஞ்சரிக்கும் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.
    
  • என்னதான் நீதி, நியாயம், நேர்மை, நகைச்சுவை என்று இருந்தாலும் உங்களுக்கு பல்வேறு வழியில் பிரச்சனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிய விஷயம் அதாவது தொழில் சார்ந்த விஷயம் கற்பீர். 
    
  • மறைந்த விஷங்களை ஆராய்ச்சியில் ஈடுபடுவார். சுக்கிரன் வீட்ல ராகு  Phd,  ஆராய்ச்சி துறையில் இருக்கும் மாணாக்கர் வெற்றி பெற குரு,  ராகுவின் அருள் கிட்டும் .
    
  • நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பலிக்கும் தன்மை கொண்டது முக்கியமாக உறவினர் மற்றும் களத்திரத்தோடு பேச்சில் அமைதியை காக்காவும்.
    
  • தொழிலில் முடங்கிய நீங்கள் ஒருவித புது ஆற்றுலுடன் செயல்படும் நேரம் இது.
    
  • நீங்கள் நினைக்க முடியாத இடத்திலிருந்து திடீர்னு வருமானம் வரும். 
    
  • சனியின் பார்வை ராசியில் பதியும் பொழுது மனக்குழப்ப நிலையை கொண்டுவரும். ராகுவின் பார்வை 6ம் வீட்டையும், ஆட்சி சனி, உச்ச வீடான பத்தாம் வீட்டையும் பார்க்கும் பொழுது, 2இல் கேது பேச்சை தொழிலாக கொண்டவர்கள் முன்னேற்றம் இருக்கும். செய்தித்துறை, ஆன்மீகம், ஜோதிடம், புரோகிதர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் தங்கள் துறைகளில் உயர்வு பெரும் காலம்.
    
  • ரத்தசம்பந்தமான, சிறுநீரக, cholestral பிரச்னை சிறு சிறு நோயின் தாக்கம் ஏற்படுத்தும் 4 மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு நோயின் தாக்கத்திலிருந்து  விடுபடுவீர்   மருத்துவச் செலவு உண்டு.
    
  • சுக்கிரன் வீட்டிற்கு  ராகு இருப்பது மனைவி, தாய்,  மற்றும் வீட்டில் உள்ள பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும்.
    
  • புதிய வீடு, தொழில  என்று செயல் படுத்தாமல் இருப்பது நன்று.  பழய வீடு வாங்கும்  நேரம் ஒரு சிலருக்கு உண்டு.
    
  • குரு 3இல் இருப்பது நல்லது அல்ல. மனோ தைரியம் இழக்க செய்வார். எந்த செயலிலும் தவறான முடிவு எடுக்க வைக்கும். அதனால்  பலமுறை யோசித்து கடவுளிடம் சென்று  முறையிட்டு செயல்படுத்தவும். 

  பரிகாரம்

  • 1. திருவண்ணாமலை, திருபுவனம், திருவெற்றியூர், திருஇராமனதீச்சரம், திருநீடூர் ஆகிய எதாவது கோவிலில் சென்று மகிழம் மர அருகில் சென்று சிவனை நினைத்து சிறிது நேரம் அமர்ந்து நினைத்ததை வேண்டிக்கொள்ளவும். பின்பு அங்குள்ள எம்பெருமானுக்கு பசு நெய் தீபம் ஏற்றவும்.
    
  • 2. கருட பகவான்,  நந்தி, குரு   மற்றும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்  வழிபாடு  உங்களை பலப்படுத்தும்.
    
  • 3. சகோதர சகோதரிக்கு உங்களால் முடிந்ததை செய்யவும்

  ***

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  விருச்சிக அன்பார்ந்த  ராசிக்காரர்கள் 7ல் ராகுவும்,  ராசி /லக்கினத்தில் கேதுவும்,  குரு இரண்டிலும், மற்றும் 3இல் சனி   சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.

  • மனதில் நினைத்ததை பளிச்சென்று சொல்லும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தை தான் உங்களுக்கு எதிரி. 
    
  • உங்கள் முயற்சியால் தொழில் சார்ந்த விஷயங்கள் முன்னேற்றம் கொடுக்க ஆரம்பிக்கும்.
    
  • உங்களுக்கு மனக்குழப்பத்துடன் தெளிவு இல்லாத விஷயங்களிலிருந்து ஞானம் பிறக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் இருக்கும்.
    
  • குடும்பத்தில் ஒரு சிலர் உங்களுக்கு பிரச்னை ஏற்படுத்துவார்கள்.
    
  • ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் முக்கியமாக 3 மாதங்ககுக்கு நிதானம் தேவை. உடலில் ஏற்படும் பிரச்னைகளை அவ்வப்போது மருத்துவரை பார்த்து சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
    
  • கர்மகாரன்  உங்களுக்கு  3இல் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது நன்மை பயக்கும்.  உங்கள் கடமையை செய்ய  பலன் தானாக சரியான நேரத்தில் பிற்பகுதியில்  கிட்டும்.
    
  • திருமண தோஷம் உள்ளவர்கள் நிவர்த்தி அடைந்து திருமணம் நடைபெறும் காலம் இது. ஒரு சிலருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும்.
    
  • கணவன் மனைவியிடையே விரிசல் இருக்கும், முக்கியமாக பெண்ணால் பிரச்னை, தாய் வழி சொத்து பிரச்னை, கூட்டாளி பிரச்னை என்று ஏற்பட வாய்ப்பு உண்டு .
    
  • வெளியூர் சென்ற மாணவர்கள் படித்து முடித்து அவரவர் தாயகம் திரும்புவார்கள்.
    
  • தந்தைக்கு உடல் சார்ந்த பாதிப்பு இருக்கும். அதுவும் மனசம்பந்த பிரச்னை ஏற்படும். முடிந்தவரை தந்தையிடம் பாசத்தை செலுத்த வேண்டும்.
    
  • ராகு சூரியன் சாரம் வரும்பொழுது அரசாங்க துறையில் வேலை வாய்ப்பு கிட்டும். அரசாங்க துறை மேன்மைபடுத்தும் நேரம்.
    
  • கடவுள் அனுக்கிரகத்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு கிட்டும்.

  பரிகாரம்

  • 1. முருகனுக்கு தேன் பஞ்சம்பிரதாம்  அபிஷேகம் செய்யவும். முக்கியமாக பைரவர்,  வக்ரகாளி,  வீரபத்திரன்  மற்றும் உக்கிர  தெய்வங்களுக்கு   பசும் பால் அபிஷேகம்  செய்வது  நன்று.
    
  • 2. நேரம் கிடைக்கும் போது விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்தது கோவிலில் தானம் செயலாம்.
    
  • 3.  கருடபகவானுக்கு பிராத்தனை செய்வது நல்லது.
    
  • 4. கருங்காலி மரக்கட்டை அல்லது கருங்காலி மாலை கொண்டு பூஜை செய்யலாம்.
    
  • 5.  வராஹி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றலாம்

  ***

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  அன்பார்ந்த  ராசிக்காரர்கள் 6ல் ராகுவும் 12ல் கேதுவும், ராசி /லக்கினத்தில் குரு சேர்ந்து  சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று  பார்ப்போம்.

  • தெய்வீக அனுகூலம் கொண்ட தனுசு ராசிக்கு ராகுவின் பார்வையில்  இருந்து விடுபடும்  நேரம். ராகு கேது உங்களுக்கு இந்த முறை அதீத நன்மைகள் கூட்டி கொடுக்கும். இருந்தாலும் மற்ற கிரகங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
    
  • சுக்கிரன் வீட்டில் ராகு இருப்பது, அதுவும் செவ்வாய் சாரத்தில் இருப்பது 6ம் பாவம் தொடர்புகொண்டு இருப்பது ஒருவித நன்மை. உங்கள் தசா புத்திக்கு ஏற்ப இன்னும் ஒருசில மாதங்களில் கடன் வாங்கி உங்களுக்கு பிடித்தமானபடி வீடு கட்டுவீர். கடன்பட்டவராக இருந்தால் கடனை தீர்க்கும் நேரமாக அமையும். 
    
  • தனுசு ராசிக்கு குரு யோகர். அவர் தற்பொழுது சந்திரனோடு சேர்ந்திருக்கும் காலம் ஒரு யோகத்தை மேம்படுத்தும்.  குரு 2க்கு வரும் காலம் தாய் வழியால் பெரும் லாபம், வீட்டு வாடகை மூலம் லாபம் ஏற்படும். ஷேர் மற்றும் வங்கியில் இருப்பு சேர்க்கை இருக்கும். புதிய வாகனம்,  ஆபரணம்  வாங்கும் நேரம்.
    
  • உங்களுக்கு கெடுதல் என்று எடுத்து கொண்டால் உங்களுடனேயே  நண்பர்கள் எதிரிகளாக இருப்பார். ஆனாலும் எதிரிகளை துவம்சம் பண்ணும் நேரம். மற்றவர்கள் உங்களை போற்றும் காலம் இது. Respect position இருக்கும்,  உயர்வு உண்டு.
    
  • பணம் அதிகம் இருக்கும் காலம். அதுவே சில நேரங்களில் தவறான வழியில் உங்களை நடத்தி செல்வார்கள். தேவைக்கு ஏற்ப,  சிறு வட்டிக்கு  கடன் வாங்கவும்.  மாட்டிக்கொள்ளாமல்  உஷார்.
    
  • மாணவர்கள் படிப்பில், முக்கியமாக ஆராய்ச்சியில் இருப்பவர்கள் உயர்வீர்கள்.
    
  • திருமணத்தில் பிரிந்தவர்கள் சேரும் காலம் இது.
    
  • ராகு செவ்வாய் சாரத்தில் இருக்கும் காலம், சனியின் தாக்கம் அனைத்தும் உங்களுக்கு வாகனம் மற்றும் வேறு சில விபத்தை ஏற்படுத்தும். அதனால் பயணிக்கும் நேரம் கவனம் தேவை.

  பரிகாரம்

  • உங்களுக்குக் குரு அனுகூலம் தேவை, அதனால் மகான்கள், சித்தர்கள் வழிபாடு தேவை. 
    
  • ஆஸ்ரமம் மற்றும்  கோவிலுக்குத் தேவையான பொருளுதவி அல்லது உணவுக்குத் தேவையானவற்றை வாங்கித் தரவும். இந்த பரிகாரம் கொஞ்சம் சனியின் பிடியிலிருந்தும் உங்களை விடுவிக்கும்.
    
  • அரசமரம் உள்ள கோவிலுக்குச் சென்று அரச மரத்தைச் சுற்றி வழிபாடு செய்ய வேண்டும். அரச மரம் / வேப்ப மரக் குச்சி கையில் வைத்து கொள்ள வேண்டும்
    
  • குருவாயூர் படத்தை வழிபாடு செய்யவும்,   முடிந்தால் குருவாயூர் சென்று அங்கே தங்கிக் காலை தரிசனம் செய்யவும்.

  ***

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  அன்பார்ந்த மகர ராசிக்காரர்கள் 5ல் ராகுவும் 11ல் கேதுவும், ராசி மற்றும் லக்கினத்தில் சனி சேர்ந்து  சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.

  • மற்றவர்களை கவரும், வலியவருக்கு உதவும் குணம் கொண்ட மகர ராசிக்காரர்கள் 71 /2 சனியில் பிடிபட்டு ஜென்ம சனியாக இருப்பார் . சந்திரன் சனி சேர்க்கை என்பது மனதை ஒருநிலை படுத்தாவண்ணம் இருக்கும்.
    
  • வீட்டில் நல்ல சுப செலவு ஏற்படும், முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்ற செலவு ஏற்படும்.
    
  • மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குழந்தை பேறு கிடைக்கும் நேரம்
    
  • கல்லூரி மாணாக்கர்களுக்கு ஏற்ற பாட துறை கிட்டும்
    
  • கேது 11ல் இருப்பது நன்று , உங்களுக்கு லாபம் அதிகம் இருக்கும். ஆனால் மூத்த சகோதரரால் பிரச்சனை ஏற்படும்
    
  • நீண்டநாளாக இருந்த திருமணம் ஆகாதவர்களுக்கு நவம்பருக்கு மேல் திருமண யோகம் கூடி வரும். முக்கியமாக மறுத்தார திருமணம் அமையும் . பிரிந்த தம்பதியர்கள் சேர்வார்கள்.
    
  • குரு சனியை தொடும் காலம் தொழிலை புதுப்பிப்பார். கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் துறை, பத்திரிகை துறை சார்ந்தவர்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
    
  • உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.  சந்தோஷத்தை தரவல்ல நேரம்
    
  • உடலில் உள்ள பிரச்சனை என்றல் நினைவாற்றல் குறையும் , ரத்தத்தில் count மாறுபடும், சிறுநீரக பிரச்சனை, சர்க்கரை, சளி சார்ந்த பிரச்சனை ஏற்படுத்தும்.

  பரிகாரம்

  • 1. பழம்பெரும் சிவன் கோவில்களில் தியானம் செய்யவேண்டும். யோகா சிறந்தது
    
  • 2. ஈட்டி மரம் குறிப்பாக, பூராட நட்சத்திரத்தன்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வது
    
  • 3. கருங்கல்லால் செதுக்கிய பிள்ளையாருக்கு பசும்பாலில் அபிஷேகம் அல்லது பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை வழிபடவேண்டும்.
    
  • 4. திருவோணம் நட்சத்திரம் அன்று விஷ்ணு கருடாழ்வாரை தரிசிக்க வேண்டும்.

  ***

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  அன்பார்ந்த கும்ப ராசிக்காரர்கள் 4ல் ராகுவும் 10ல் கேதுவும், இன்னும் ஓரிரு மாதங்களில் சனியும் குருவுடன் சேர்ந்து 12ல்  சஞ்சரிக்கும் காலம் என்ன பலா பலன் என்று பார்ப்போம்.

  • என்ன நினைக்கீர்கள் தெரிய வண்ணம் இருக்கும் தெய்வீக அருள் கொண்ட கும்ப ராசிகாரர்கள்  பூர்வீக சாபத்தில் இருந்து தற்பொழுது வெளி வரும் நேரம்.
    
  • தொழில் காரகன் செவ்வாய் சாரத்தில் ராகு உள்ளே செல்லும் போது பல நஷ்டங்களில் இருந்து சிறிது சிறிதாக புத்தியுடன் விடுபடும் நேரம். மற்றும் உங்கள் 2ம் வீட்டை ராகு  பார்க்கும்போது குடும்ப உறவையும் பலப்படுத்தும்
    
  • தொழில் விஷத்தில் ஒரு சில பிரச்சனை தடங்கல், வாக்குவாதம் என்று  ஏற்படும். அதனால் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். தொழில் சார்ந்து  சிறுதூர பயன் அதிகமாக இருக்கும்.
    
  • பத்தில் கேது இருப்பது நன்று ஆனால் வேலையை  மாற்றிவிடும். முக்கியமா புதிய மற்றும் கூட்டு தொழில் யோசித்து முடிவு எடுக்கவும்
    
  • நிறைய ஸ்ட்ரெஸ் இருப்பதால். சிறு சிறு உடல் உபாதைகள் உங்களுக்கு ஏற்படும் . உடலின் எதிர்ப்பு சக்தியை  அதிகப்படுத்தவும்.
    
  • 4ல் ராகு இருப்பதால் தாயாருக்கு உடல் பாதிப்பு ஒருசிலருக்கு அறுவை சிகிட்சையும் வேறுபடும்.
    
  • சுக்கிரன் வீட்டில் , 4ல் ராகு இருப்பதாலும் 6ம் வீட்டை பார்வை இடுவதாலும் கடன் வாங்கி நீங்கள் ஆடம்பர அழகான வீட்டை கட்ட செய்வீர்கள்
    
  • கூட்டு தொழிலால் மற்றும் களத்திரத்தால் உங்களுக்கு செலவு ஏற்படும்
    
  • மாணவர்கள் படிப்பில் மற்றும் படிப்பு சார்ந்த விஷயத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். ஆன்லைன் கோர்ஸ் படிப்பை அதிகம் படிப்பீர். 

  பரிகாரம்

  1. ஹோமம் செய்வது நல்லது. அல்லது கோவில்களில் ஹோமம் நடைபெறும் போது உங்களால் முடிந்ததை வாங்கிக்கொடுத்து ஹோமத்தில் கலந்து கொள்ளவும்

  2. வன்னி மரம் தல விருட்சமாகக் கொண்ட சிவனை வழிபடுவது நன்று.

  3. தேய்பிறை பஞ்சமி திதி வராகி தாயை நெய் தீபம் ஏற்றி வணக்க வேண்டும்

  4. மகா கணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபடவேண்டும்.

  ***

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  அன்பார்ந்த மீன ராசிக்காரர்கள் மூன்றாம் இடம் ராகுவிற்கு ஏற்ற இடத்திலும் 9ல் கேதுவும், இன்னும் ஓரிரு மாதங்களில் சனியும் குருவுடன் சேர்ந்து 11ல்  சஞ்சரிக்கும் காலம் என்ன பலன் என்று பார்ப்போம்.

  • மனதில் ஒருவித தெய்வ பயத்தோடு செயல்படும் நீங்கள் இந்த பெயர்ச்சி மீன ராசிக்கு ஒருவித நற்பலன்கள் கிட்டும்.
    
  • 3ம் வீட்டில் ராகுவும் அவரின் பார்வை சனி உடன் சேர்ந்து ராசியை பார்க்கும்பொழுது ஜாதகர் தன்னுடைய முழு முயற்சி கொண்டு கடின உழைப்பை மூலதனமாக கொண்டு உயர்வீர்.
    
  • 9இல் கேது தந்தைக்கு ஆபத்து அல்லது ஒரு சில வாங்குவதை பிரச்சனை ஏற்படும்.  அதனால் முடிந்தவரை பெற்றோரிடம் அமைதி காக்கவும்
    
  • சந்திரன் ராகு என்பதால் பெண்ணாக இருந்தால் வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்படும். மற்றும் தாய் வழி சார்ந்த  சொத்து உங்களுக்கு பிராப்தம் இருந்தால் உங்களை வந்து சேரும்
    
  • ஒரு சிலருக்கு நீண்ட நாளாக இருந்த குழந்தை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்டும். தத்து குழந்தை தேடியவர்கள் நீங்கள் நினைத்தமாதிரி குழந்தை உங்களை வந்து சேரும்
    
  • ராகு சந்திரனை பார்ப்பது என்பது ஒரு வித மனம் சார்ந்த பிரச்சனை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புகள் வேலைகள், படிப்பு சம்பந்தமாக அடுத்த வருடம் துவங்கும்
    
  • 5ம் இடத்தை ராகு பார்வை படுவதால் காதலில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படும். திருமணம் ஆனவர்கள் மற்ற விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் 
    
  • உங்களின் குரு நவம்பர் மேல் மகரத்தில் சனி உடன் சேர்ந்து குருவின் பார்வை ராகு மேல் படும்போது மீன ராசி லக்கினம்  கொண்டவர்கள் யோகத்தை அடைவார்.
    
  • பிஸ்னஸில் ஒரு விரிவான மாற்றம் அதிர்ஷ்டம் கிட்டும்.

  பரிகாரம்

  1. குலதெய்வம், திருச்செந்தூர் வழிபாடு அவசியம் 

  2. குரு நீச்சம் ஆவதால் நீங்கள் குருவான மகான்கள் பிராத்தனை செய்ய வேண்டும். குருவை activate  பண்ணவேண்டும்

  3. தசா புத்திக்கு ஏற்ற பரிகாரம் மற்றும் ஆன்மீக பிரயாணம் செய்யவேண்டும்.

  4. புன்னை மரம் கொண்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது முக்கியம். இந்த புன்னை மரத்தை கோவிலில் நடலாம்.

  குருவே சரணம்

  - ஜோதிட சிரோன்மணி தேவி

  Whats app: 8939115647

  Email: vaideeshwra2013@gmail.com

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp