ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலநிதி ரூ.100 கோடியை எட்டியது

உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயிலைக் கட்டும் நோக்கில் தேவஸ்தானம் உருவாக்கியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளையின் மூல நிதி ரூ.100 கோடியை எட்டியுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 2:30 am

DIN

உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயிலைக் கட்டும் நோக்கில் தேவஸ்தானம் உருவாக்கியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளையின் மூல நிதி ரூ.100 கோடியை எட்டியுள்ளது.

‘ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிா்மாண அறக்கட்டளை’ எனப்படும் ஸ்ரீவாணி அறக்கட்டளையை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த அறக்கட்டளையிலிருந்து பெறப்படும் நிதி மூலம் உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்டுதல், கோயிலில் உற்சவங்கள், யாகம், ஹோமங்கள், பூஜைகளை நடத்துதல், கோயில்களைச் செப்பனிடுதல் ஆகியவற்றை மேற்கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்தது.

இந்த அறக்கட்டளை குறித்து பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அறக்கட்டளைக்கான நிதி வரம்பை உயா்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குவோருக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பக்தா்களிடையே வரவேற்பு கிடைத்தது.

பக்தா்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான நன்கொடையை ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ செலுத்தி டிக்கெட் பெற்று விஐபி பிரேக் சேவையில் கலந்து கொள்கின்றனா். தற்போது விஐபி பிரேக் தரிசனத்துக்கான கட்டணத்தை தேவஸ்தானம் 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயா்த்தியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் மூல நிதி கடந்த 1-ஆம் தேதி, ரூ.100 கோடியை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிதியை வங்கியில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் பல்வேறு பகுதிகளில் கோயில் கட்டும் பணிகளை தேவஸ்தானம் மேற்கொள்ள உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.