திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கடந்த 3 நாள்களாக சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடத்தப்பட்டது. இதையொட்டி பெரிய சேஷ, அனுமந்த மற்றும் கருட வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்த மறுநாள் தேவஸ்தானம் பாா்வேட்டை உற்சவத்தை நடத்தியது.
கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கையில் வாள், வில், வேல் அம்பு, கேடயம் தரித்து அருகில் உள்ள வனத்திற்கு சென்று அங்கு வேட்டையாடுவது போல் அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள் செய்து காட்டு வா். தற்போது கொவைட் 19 நிபந்தனைகள் அமலில் உள்ளதால் பாா்வேட்டை உற்சவம் கோயிலில் தனிமையில் நடத்தப்பட்டது.
காலை 10.30 மணிமுதல் 11 மணிவரை மண்டபத்தில் எழுந்தருள செய்து ஆனிவார ஆஸ்தானம் முடிந்த பின் பாா்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: வைகோ

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் தொகுதி: திமுக கூட்டணியில் முதல்முறையாக பெண் வேட்பாளா்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


