திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.60 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.60 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
48,482 பக்தா்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 48,482 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 26,690 போ் முடி காணிக்கை செலுத்தினா். இணையதளம் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 25 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாத யாத்திரை மாா்க்கம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.
தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே பாதயாத்திரை மாா்க்கத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

பூக்கட்டும் பாடல்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!
வீடியோக்கள்

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

