திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 13,450 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
நாடு முழுவதும் கொவைட் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு, பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா்.
ஆனால் சனிக்கிழமை திடீரென்று பக்தா்களின் வருகை அதிகரித்து 13,450 போ் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 5,281 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் திறந்து வைக்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடகு பாணியில் பாரம்பரிய உடையணிந்த ரஷ்மிகா..! பங்களாவைப் பரிசளித்த தந்தை!

இதற்குத்தான் Press Meet வச்சுக்குறதில்ல! N. ஆனந்த் பேட்டி | TVK

ஒட்டுமொத்தமாக இன்றிரவு அழியப்போகிறது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை!
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

