ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (மகரம்)

மகர ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (மகரம்)
Published on
Updated on
3 min read

மகர ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்டுப்கு இலக்கணமாகத் திகழும் மகர ராசி அன்பர்களே!

இந்த வருடம் ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் சேரும் மார்க்கமும் உண்டு. வாகன போக்குவரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.உங்களின் பொருளாதாரத்தில் மேல் நிலையைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை  உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள்.

பொது நலத்  தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.  பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய  சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு  கிடைக்கும். அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள் முடிவடையும்.

கடுமையாக உழைத்து  எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு  ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.  வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான  குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும்,  அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள்.  அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும்  ஆண்டாகவும் இது அமைகிறது.

உத்யோகஸ்தர்களுக்கு..

உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின்  முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின்  அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன்  வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு..

வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை  விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக்  கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும். 

பெண்களுக்கு..

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில்  இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.  நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.

மாணவர்களுக்கு..

மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக  மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். ஆசிரியரிடம் மரியாதை சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.

கலைஞர்களுக்கு..

கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள்  உயரும்.

அரசியல்வாதிகளுக்கு..

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்

மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம்  தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

திருவோணம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை   கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்..

உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு  உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு

சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் விநாயகர் அகவல் சொல்லவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com