ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பங்குனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

News image
Updated On :13 மார்ச் 2023, 11:32 am

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது.

தொடர்ந்து மறுநாள் முதல் 15 ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் கருவறையைத் திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். அதைத்தொடர்ந்து நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரூ அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை துவக்கி வைக்கிறார். 

அதன்பின்னர், கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் துவங்கும். மார்ச் 19 வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். 

ஏப்ரல் மாதம் உத்திரத் திருவிழாவையொட்டி சபரிமலை கோயில் நடை மாா்ச் 26-ஆம் தேதி திறக்கப்படும். தொடர்ந்து, மாா்ச் 27-ஆம் தேதி கொடியேற்றம், ஏப். 5-ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு நடைபெறவுள்ளதாக கோயில் மக்கள் தொடா்பு அலுவலா் சுனில் அருமானூா் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.